முகப்பு /செய்தி /தமிழ்நாடு / டிஜிட்டல் பேனர்களால் வாழ்வாதாரத்தை இழந்த ஓவியர்கள்... அரசு உதவ கோரிக்கை

டிஜிட்டல் பேனர்களால் வாழ்வாதாரத்தை இழந்த ஓவியர்கள்... அரசு உதவ கோரிக்கை

சுவர் ஓவியம்

சுவர் ஓவியம்

டிஜிட்டல் பேனர்களின் வருகையால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள சுவர் ஓவியர்கள் தங்களது ஓவியத் தொழில் அழிவின் விளிம்பில் இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

டிஜிட்டல் பேனர்களின் வருகைக்கு முன்பு சுவர் விளம்பரங்கள் மூலமாகவே அரசியல் கட்சிகள் தங்களின் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்த்தனர். தலைவர்களின் உருவப்படங்களையும், கட்சிகளின் சின்னங்களையும் மக்கள் மனதில் இடம்பெற செய்வதில் இந்த ஓவியர்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. கோவில் திருவிழாக்கள் தொடங்கி, அரசியல் பொதுக்கூட்டங்கள் வரை ஆண்டு முழுவதும் இந்த ஓவியத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு இருந்து வந்தது. ஆனால் டிஜிட்டல் பேனர்கள், கிராபிக்ஸ் அச்சு தொழில்நுட்பத்தின் அபரிதமான ஆக்கிரமிப்புக்கு பிறகு இந்த ஓவியர்கள் காலப்போக்கில் பின்னுக்கு தள்ளப்பட்டனர்.

தேர்தல் நேரத்தில் மட்டுமே அவர்களுக்கு வேலை கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. அதுவும் நாள் முழுவதும் கால்நோக நின்று வரையும் ஒவியங்களுக்கும், எழுத்துக்களுக்கும் சொற்ப வருவானமே கிடைப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

சுவர் ஓவியங்களில் போதிய வருமானம் கிடைக்காததால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், இந்த தொழிலை கைவிட்டு வேறு பணிக்கு சென்று விட்டனர். இந்த ஓவியத்தொழில் முற்றிலுமாக அழிந்துவிடாமல் பாதுகாக்க அரசு தங்களுக்கு போதிய ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க... கள்ளக்காதல்: சொத்துக்காக கொழுந்தனைக் கொன்ற அண்ணி - ஒன்றரை ஆண்டுகள் கழித்து பிடிபட்டது எப்படி?

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் கட்சிகளின் சின்னங்கள் மற்றும் வாக்காளர் பெயர்களை எழுதும் பணிகளை ஓவியர்கள் தொடங்கி உள்ளனர். தங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தங்களுக்கான கூலித் தொகையை உயர்த்தி தர வேண்டும் என்று ஓவிய தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Banners, Draw, Poster