முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சுவர் இடிந்து 17 பேர் பலியான வழக்கில் வீட்டு உரிமையாளருக்கு ஜாமின்

சுவர் இடிந்து 17 பேர் பலியான வழக்கில் வீட்டு உரிமையாளருக்கு ஜாமின்

சுவர் இடிந்து 17 பேர் பலியான வழக்கில் வீட்டு உரிமையாளருக்கு ஜாமின்

  • 1-MIN READ
  • Last Updated :

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த வழக்கில் வீட்டு உரிமையாளர் சிவசுப்ரமணியத்திற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மேட்டுப்பாளையத்தில் கடந்த 2 ஆம் தேதியன்று 20 அடி உயர சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், வீட்டின் உரிமையாளர் சிவசுப்ரமணியனை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். சிவசுப்ரமணியனின் ஜாமின் மனுவை கோவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், மேட்டுப்பாளையத்தில் பெய்த கனமழையின் காரணமாகவே மண் சரிந்து வீட்டின் சுற்றுசுவர் இடிந்து விழுந்து அசம்பாவிதம் நிகழ்ந்ததாகவும், எந்த உள் நோக்கத்துடனும் சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை என்பதால், தனக்கு ஜாமின் வழங்கினால் இந்த வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சேஷசாயி, சிவசுப்ரமணியனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், 1 லட்சம் ரூபாய் பிணைத்தொகை கொண்ட இரு நபர் உத்தரவாதம் அளிக்க வேண்டுமெனவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மதுரையில் தங்கி இருந்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது ஜாமின் வழங்கினார்.

First published:

Tags: Mettupalayam