ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னை To கன்னியாகுமரி.. பாஜகவுக்கு எதிராக நடைபயணம்.. காயத்ரி ரகுராம் அறிவிப்பு

சென்னை To கன்னியாகுமரி.. பாஜகவுக்கு எதிராக நடைபயணம்.. காயத்ரி ரகுராம் அறிவிப்பு

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

பாஜகவுக்கு எதிராக சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடைபயணம் மேற்கொள்ளவுள்ளதாக காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

பாஜகலிருந்தும்  6 மாத காலத்திற்கு காயத்ரி ரகுராம் நீக்கப்படுவதாக அக்கட்சியின் சார்பில் கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியானது. இதனிடையே பெண்களுக்கு மரியாதை, சம உரிமை இல்லாத தமிழ்நாடு பாஜகவில் இருந்து வெளியேறும் முடிவை கனத்தை இதயத்துடன் எடுக்கிறேன் என்று காயத்ரி ரகுராம் ட்விட்டரில் சமீபத்தில் அறிவித்தார். அத்துடன், தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அண்ணாமலை மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சில நாட்களுக்கு முன்பு அவரது ராஜினாமாவை பாஜக தலைமை ஏற்றுக்கொண்டது.

இந்தநிலையில் டிவிட்டரில் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், பா.ஜ.க பெண்களை அவமானப்படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும் ஜனவரி 27ம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடைபயணம் நடத்தவுள்ளதாக கூறியுள்ளார். மேலும் யார் வேண்டுமானாலும் தன்னுடன் இணையலாம் என்றும்,எந்த அச்சுறுத்தலுக்கும் தான் பயப்படவில்லை என்றும் காயத்ரி ரகுராம் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்காக இந்த நடைபயணம் நடத்துவதாகவும் காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

First published:

Tags: BJP, Gayathri Raghuram