• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • ’ரஜினியின் அரசியல் அறிவிப்பிற்காக காத்திருக்கிறோம்’ - அர்ஜுன் சம்பத் கருத்து

’ரஜினியின் அரசியல் அறிவிப்பிற்காக காத்திருக்கிறோம்’ - அர்ஜுன் சம்பத் கருத்து

ரஜினிகாந்த் - அர்ஜுன் சம்பத்

ரஜினிகாந்த் - அர்ஜுன் சம்பத்

ரஜினியின் அரசியல் அறிவிப்பிற்காக காத்திருப்பதாகவும் அவர் கட்சி தொடங்காவிட்டால் அனைத்து தொகுதிகளிலும் தங்கள் கட்சி போட்டியிடும் என்றும் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

 • Share this:
  இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, ராமர் கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியது உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளைப் போன்று மத்திய பாஜக அரசு இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயம் என்பதால் உடனடியாக நடைமுறைப்படுத்த கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

  அவர் மேலும் கூறுகையில், கொரோனாவை காரணம் காட்டி, கேரள மாநில அரசும் சபரிமலை தேவஸ்தானம் போர்டும் நாளொன்றுக்கு 2,000 பக்தர்கள் எனவும் மகர விளக்கு பூஜைக்கு 5,000 பேர் மட்டுமே அனுமதி வழங்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை தரிசனம் செய்வது தடைபடுகிறது. எனவே மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை செல்கின்ற பக்தர்களுக்கு கூடுதலாக அனுமதி வழங்கவேண்டும். மேலும் நெய்யபிஷேகம், பம்பை நதியில் புனித நீராடுதல்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் திங்கட்கிழமை கேரள முதலமைச்சருக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர் மூலமாக கோரிக்கை கடிதம் அனுப்பிவைக்கப்பட உள்ளது என்று கூறினார்.

  Also read: ‘சூரரைப்போற்று’ பொம்மி கேரக்டர் உருவான விதம் - வீடியோ  தொடர்ந்து பேசிய அவர், ரஜினிகாந்த் தனது மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி, வரும் ஜனவரியில் அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பதாகக் கூறியுள்ளார். அவரது அரசியல் அறிவிப்பிற்காக நாங்கள் காத்திருக்கிறோம். ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி செயல்படும். ஒருவேளை அவர் கட்சி தொடங்காவிட்டால் தமிழகத்தில் ஆன்மிக அரசியல் ஏற்படுத்துவதற்காக அனைத்து தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி போட்டியிடும் எனத் தெரிவித்தார்.

  பாஜகவின் வேல் யாத்திரைக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவளிக்கும் என்று கூறிய அர்ஜுன் சம்பத், வேல் யாத்திரைக்குத் தடை விதிப்பது தேவையற்றது. சமீபத்தில் பட்டியலின மக்கள் பெரும்பாலானோர் பாஜகவில் இணைந்து வருவதால் திமுக, திருமாவளவன், சீமான் உள்ளிட்டோர் எதிர்த்து வருகின்றனர். அமித்ஷாவின் தமிழக வருகை யாரையும் அச்சுறுத்துவதற்காக அல்ல. அவரது வருகையால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டு பாஜக வலுப்பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Rizwan
  First published: