ஏழு பேர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம்! சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம்

ஏழு பேர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம்! சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
  • Share this:
ஏழு பேர் விடுதலை தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நடைபெற்ற விவாதத்தின்போது, ’ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளதாகவே நான் கருதுகிறேன் என்று எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசினார்.

அதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘மாநிலத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சரவைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி முடிவு எடுத்து ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு காலக் கெடுவுக்குள் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் என்று இல்லை. தமிழக அரசு ஆளுநரின் முடிவுக்கு காத்திருக்கிறது’ என்று தெரிவித்தார்.


அதனைத்தொடர்ந்து பேசிய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ஆளுநர் ஏன் முடிவு எடுக்கவில்லை என்று கேட்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதுகுறித்து ஆளுநரிடம் கேட்டு உள்ளீர்களா?’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘இந்த விவகாரம் குறித்து மத்திய அரசும் தெளிவுபடுத்தியுள்ளது. ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆளுநர் முடிவுக்கு நாங்களும் காத்திருக்கிறோம். நாட்டு மக்களும் காத்திருக்கிறார்கள். எனவே, ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என எதிர்பார்த்திருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

Also see:

 
First published: February 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading