5 வருடத்திற்கான கூலி வெறும் 5 ஆயிரம் கிடையாது - கமல்ஹாசன்

கமல்ஹாசன்

எங்கள் ஒட்டு விற்பனைக்கு இல்லை என்ற குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும், டெல்லிக்கு கேட்க வேண்டும் என கோவையில் தேர்தல் பரப்புரையின் போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பேசியுள்ளார்.

  • Share this:
கோவை தெற்கு எனக்கு முக்கிய விலாசமாக மாறியுள்ளது எனவும் இனி உங்கள் முகமாக இந்தியா முழுவதும் தெரிய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தியாகி குமரன் வீதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் இன்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்
மக்கள் நீதி மய்யத்திற்க்கு சாதி, மத பேதம் கிடையாது எனவும், கோவையில் மத நல்லிணக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும், அதை நான் விரும்புகிறேன் என தெரிவித்தார்.

கோவை தெற்கு எனக்கு முக்கிய விலாசமாக மாறியுள்ளது எனவும், ஏற்கனவே இந்தியா முழுவதும் என்னை தெரியும், இனி உங்கள் முகமாக இந்தியா முழுவதும் தெரிய வேண்டும் என தெரிவித்த அவர்,
யார் குரல் கொடுத்தாலும் கேட்பதற்கு தான் மத்தியில் அரசை வைத்துள்ளோம் என தெரிவித்தார்.

ஒரு அரசை வைப்பதும் நீக்குவதும் உங்கள் முடிவாக இருக்க வேண்டும் என தெரிவித்த கமலஹாசன், எங்கள் ஒட்டு விற்பனைக்கு இல்லை என்ற குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும், டெல்லிக்கு கேட்க வேண்டும் என தெரிவித்த அவர், யாரும் விலைக்கு வாங்க கூடாது என தெரிவித்தார். 5 வருடத்திற்கான கூலி வெறும் 5 ஆயிரம் கிடையாது என தெரிவித்த அவர், பெண்களுக்கான எங்களின் திட்டங்களை அனைத்து அரசியல் கட்சிகளும் காப்பியடிக்கின்றன,
ஆண்ட இரண்டு அரசுகளும் காப்பி அடிக்கின்றனர் என தெரிவித்தார்.

அவர்கள் அறிவித்த திட்டம் எதையும் அவர்களே நிறைவேற்றுவதில்லை அதனால் இதை நாம்தான் நிறைவேற்றுவோம் என தெரிவித்த அவர்,
தேர்தலில் வெற்றி பெறும் எங்களின் அனைத்து எம்.எல்.ஏகளும் செய்த திட்டங்களை பாண்டு பத்திரத்தில் பட்டியல் போட்டு கொடுப்பார்கள், தகவல் அறியும் சட்டத்தில் அதை தெரிந்து கொள்ளலாம் எனவும், இனி உங்களுக்கு பணி செய்வதுதான் என் வாழ்நாள் வேலை என ம.நீ.ம தலைவர் கமலஹாசன் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.
Published by:Arun
First published: