முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சசிகலாவின் பினாமி எனக்கூறி நிதி நிறுவன அதிபரின் சொத்துக்கள் முடக்கம் - ஆதாரம் கேட்கும் நீதிமன்றம்

சசிகலாவின் பினாமி எனக்கூறி நிதி நிறுவன அதிபரின் சொத்துக்கள் முடக்கம் - ஆதாரம் கேட்கும் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)

சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)

சசிகலாவின் பினாமி எனக் கூறி நிதி நிறுவன உரிமையாளரின் சொத்துகள் முடக்கப்பட்டது தொடர்பான வழக்கில் வருமான வரித்துறையிடம் நீதிமன்றம் ஆதாரம் கோரியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சசிகலாவின் பினாமி எனக்கூறி வருமான வரித்துறையினர் தனது சொத்துக்களை தவறாக முடக்கம் செய்ததாக நிதி நிறுவன உரிமையாளர் வி.எஸ்.ஜே.தினகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

நிதி நிறுவனம் நடத்தி வரும் வி.எஸ்.ஜே.தினகரன், பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மால் என்ற கட்டடத்தில் ஒரு கடை வைத்துள்ளார். இவர் 11,000 சதுர அடி அளவிலான நிலத்தை வாங்கியுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு சசிகலாவின் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியதின் தொடர்ச்சியாக தினகரனின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.

Also see:

இதையடுத்து ஸ்பெக்ட்ரம் மாலில் உள்ள அவருக்கு சொந்தமான சொத்துக்களையும் வருமான வரித் துறை முடக்கம் செய்தது.

இந்நிலையில், வருமான வரித்துறைக்கு எதிராக அவர் தொடுத்த வழக்கில், 2 வாரங்களில் அனைத்து ஆவணங்களுடனும் விரிவாக பதிலளிக்க வேண்டும் என வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

First published:

Tags: Judgement, Sasikala