தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள செவெனத்டே அட்வென்டிஸ்ட் பள்ளியில் துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், போடிநாயக்கனூர் தொகுதி வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார்.
துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவரது அம்மா பழனியம்மாள், மனைவி விஜயலட்சுமி மற்றும் மகன் மருமகளுடன் வருகை தந்து வாக்குப் பதிவு செய்தார்.
Must Read : நடிகர் ரஜினி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்ளிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக அறுதிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்” என்று கூறினார்.