வாக்கு இயந்திரங்கள் பழுதால் பல இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு!

Lok Sabha Election 2019 | அஜித், விஜய், விஜய் ஆண்டனி என திரைத்துறைப் பிரபலங்கள் மற்றும் முதலமைச்சர் எடப்படி பழனிச்சாமி, சிதம்பரம் என அரசியல் தலைவர்களும் தங்களின் வாக்கைச் செலுத்தி விட்டனர்.

news18
Updated: April 18, 2019, 8:19 AM IST
வாக்கு இயந்திரங்கள் பழுதால் பல இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு!
வாக்கு இயந்திரம்
news18
Updated: April 18, 2019, 8:19 AM IST
மக்களவைத் தேர்தல் நாளான இன்று காலை ஏழு மணி முதலே மக்கள் வாக்களிக்க சென்றுவிட்டனர். இந்நிலையில் பேராணம்பட்டு, திருச்சங்கோடு, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுதடைந்துள்ளன. இதன் காரணமாக மக்கள் நீண்ட வரிசையில் பல நிமிடங்களாகக் காத்திருக்கின்றனர். 

இன்று காலை 7 மணிக்கு மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், அஜித், விஜய், விஜய் ஆண்டனி என திரைத்துறைப் பிரபலங்கள் மற்றும் முதலமைச்சர் எடப்படி பழனிச்சாமி, சிதம்பரம் என அரசியல் தலைவர்களும் தங்களின் வாக்கைச் செலுத்தி விட்டனர்.

பல இடங்களில் வாக்கு எந்திரங்கள் பழுது என்ற தகவல்கள் வந்துள்ளன. பேரணாம்பட்டு அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் 2 வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

அதேபோல், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சீத்தாராம் பாளையம் வாக்கு சாவடி எண் 166ல் வாக்கு பதிவு இயந்திரம் பழுதடைந்தது. இதனால் முதல் வாக்கு செலுத்த வந்த  திருச்செங்கோடு சட்ட மன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி 30 நிமிடங்களாக காத்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியிலும் மின்னனு வாக்கு இயந்திரத்தில் கோளாறு காரணமாக  மக்களவை தொகுதிக்கான 132வது வாக்கு சாவடியில் இன்னும்  வாக்கு பதிவு துவங்கவில்லை.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...