முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகம் முழுவதும் நாளையும், நாளை மறுநாளும் வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் நாளையும், நாளை மறுநாளும் வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த சிறப்பு முகாம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இந்த பணி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகம் முழுவதும் 2-வது கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் நாளை (டிசம்பர் 12) மற்றும் நாளை மறுநாள் (டிசம்பர் 13) என 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில், 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். திருத்தவோ, நீக்கவோ வேண்டுமெனில், அதற்காக தனியாக விண்ணப்பிக்கலாம்.

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதனை முன்னிட்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் பணியினை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியது. தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இந்த பணி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் 2-வது கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் நாளை (டிசம்பர் 12) மற்றும் நாளை மறுநாள் (டிசம்பர் 13) 2 நாட்கள் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த முகாம்களில் பொது மக்கள், அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நேரில் சென்று வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா? என்று சரிபார்த்துக் கொள்ளலாம்.

மேலும் 2 இடங்களில் பெயர் இருந்தால் அவற்றை நீக்கவும், இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் பெயர்களை நீக்கும் பணிகள் இந்த முகாம்கள் வழியாக செய்யப்படுகிறது. கடந்த முகாமைவிட நாளை நடைபெறுகின்ற முகாமில் அதிக மனுக்கள் பெறப்பட வாய்ப்பு உள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Election Commission, Voters list