Home » News » Tamil-nadu » VOTERS LIST DRAFT RELEASED SIX CRORES 10 LAC VOTERS IN TAMIL NADU RIZ

புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 6.10 கோடி; புதிய வாக்காளர்கள் 31 லட்சம் பேர்

தமிழகத்தில் 6.10 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க தகுதியுடைவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 6.10 கோடி; புதிய வாக்காளர்கள் 31 லட்சம் பேர்
மாதிரிப்படம்
  • Share this:
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், புதிய வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ வெளியிட்டார். இதன், அடிப்படையில் தமிழகத்தில் 6.10 கோடி பேர் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 3.1 கோடி ஆண் வாக்காளர்களும் 3.9 கோடி பெண் வாக்காளர்களும் 6,385 மூன்றாம் பாலின வாக்காளர்களும் அடங்குவர்.

புதிய வாக்காளர்களைப் பொறுத்தவரை மாவட்ட அளவில் மொத்தம் 15,165 பேர் புதிதாக சேர்க்கப்பட்டு, கோவை முதலிடம் வகிக்கிறது. அரியலூரில் மொத்தம் 1,022 பேர் மட்டுமே புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். 6.55 லட்சம் வாக்காளர்களுடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் அதிக வாக்காளர்கள் தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறைவான வாக்காளர் கொண்ட தொகுதியாக, நாகை மாவட்டம் கீழ்வேலூர் உள்ளது. இங்கு, 1.73 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

சென்னையில் மொத்தம் 39.40 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில், ஆண்கள் 19.39 லட்சம் பேரும் பெண்கள் 19.99 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 1,015 பேரும் இடம்பெற்றுள்ளனர்.


2016 ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 5.79 கோடி வாக்காளர்களும், 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது வெளியிடப்பட்ட பட்டியலில் 10 லட்சம் புதிய வாக்காளர்களும் இடம்பெற்றனர். 2016-வுடன் ஒப்பிடுகையில் தற்போது 31 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வடமாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தென்மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம். பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற திருத்தப்பணிகளை மேற்கொள்ள, வருகின்ற 21, 22 தேதிகள் மற்றும் டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

Also read: சென்னை: மது அருந்தும்போது நண்பரை பாட்டிலால் அடித்துக்கொன்றுவிட்டு தப்பியோடியவர் கைதுஅப்போது, உரிய ஆவணங்களைக் கொடுத்து திருத்தம் செய்துகொள்ளலாம் என்றும், இறுதி வாக்காளர் பட்டியல் 2021 ஜனவரி மாதத்தில் வெளியாகும் என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
First published: November 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading