தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது!

தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது!
  • Share this:
தமிழகத்தில் இறுதி வாக்களர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தமிழகத்தில் வாக்களர்களின் எண்ணிக்கை 6 கோடியை தாண்டி உள்ளது.

2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் இன்று வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள நான்கு முறை சிறப்பு வாக்காளர் முகாம் தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து சுருக்கமுறை திருத்தம் நடைபெற்று இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 13 லட்சத்து 6 ஆயிரத்து 638 உள்ளதாகவும் இதில் ஆண்கள் 3 கோடியே இரண்டு லட்சத்து 54 ஆயிரத்து 172 பேர் வாக்காளர்களாக உள்ளனர். அதேபோல பெண்கள் 3 கோடியே 10 லட்சத்து 45 ஆயிரத்து 969 பேர் வாக்காளர்களாக உள்ளனர், மூன்றாம் பாலினத்தவர் 1497 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.


தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். இன்று வெளியிடப்பட்ட இந்த இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. குறைந்த அளவு வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சென்னை துறைமுகம் தொகுதி உள்ளது.

சோழிங்கநல்லூர்: 6,60,317
ஆண்கள் - 3,31,996; பெண்கள் - 3,28,232; மூன்றாம் பாலினத்தவர் - 89துறைமுகம்: 1,73,337
ஆண்கள் - 90,333; பெண்கள்- 82,952; மூன்றாம் பாலினத்தவர் -52

அதேபோல 18 முதல் 19 வயதுள்ள வாக்காளர்கள் இந்த சுருக்கமுறை திருத்தம் மூலமாக வாக்காளர்களாக சேர்ந்துள்ளனர். 5 லட்சத்து 85 ஆயிரத்து 580 பேர்  புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்று வெளியிடப்பட்ட இந்த இறுதி வாக்காளர்கள் பட்டியலில் வெளிநாடு வாழ் வாக்காளர்கள் 16 பேரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் தொடர்ந்து திருத்த நடைமுறை நடைபெற்று வருகிறது. 18 வயது நிறைவு பெற்றோர்களும் பெயர் முகவரி மாற்றம் செய்ய விரும்புவர்கள் வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். nsvp.in என்கிற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். Voterhelpline செயலியை தரவிறக்கம் செய்து அதன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பொது மக்கள் தேர்தல் தொடர்பான தகவல்களையும் அறிய மனம் தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: February 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்