வாக்களிக்கச் செல்வோர் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்...!

நீங்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று நினைத்தால் நோட்டாவிற்கு வாக்களிக்கலாம்.

news18
Updated: April 18, 2019, 8:07 AM IST
வாக்களிக்கச் செல்வோர் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்...!
வாக்கு இயந்திரம்
news18
Updated: April 18, 2019, 8:07 AM IST
இன்று காலை ஏழு மணி முதல் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் தொடங்கப்பட்டது. மக்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றத் தொடங்கிவிட்டனர்.

இருப்பினும் முதல் முறை வாக்களிக்கச் செல்வோர் எந்தெந்த ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும், என்ன விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்பதைக் காணலாம்.

வாக்குச் சாவடிக்குச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்:

ஒவ்வொரு இந்தியரும் அவருடைய வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். வாக்காளர் சீட்டு அல்லது மற்ற ஏதேனும் புகைப்படம் கொண்ட ஆவண அட்டைகள் எடுத்துச் செல்லலாம்.

வாக்காளர் முதலில் அமர்ந்திருக்கும் தேர்தல் அலுவலரிடம் செல்ல வேண்டும். அவர் உங்களது வாக்காளர் அடையாள அட்டையை சரி பார்ப்பார். அவர் உங்களது பெயர் மற்றும் சீரியல் எண்ணை சரிபார்த்து சொல்வார். அது சரியாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் வாக்களிக்கலாம்.

இரண்டாவதாக மற்றொரு தேர்தல் அதிகாரி அமர்ந்திருப்பார். அவர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் மை வைப்பார். பின் உங்களுடைய சீரியல் எண்ணைக் குறித்து வைத்துக் கொண்டு உங்களுடைய கையெழுத்து அல்லது கை ரேகை வைக்கச் சொல்வார். பின் அவர் நீங்கள் வாக்களிக்க வாக்காளர் ரசீது வழங்குவார்.

அடுத்ததாக அந்த வாக்காளர் ரசீதை மூன்றவதாக அமர்ந்திருக்கும் தேர்தல் அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். பின் அவர் EVM கட்டுப்பாட்டுப் பிரிவில் இருக்கக் கூடிய வாக்குச் சீட்டுப் பொத்தானை ( Ballot Button ) அழுத்துவார். பின் நீங்கள் வாக்களிக்கத் தொடங்கலாம்.

வாக்கு அளிக்கும் இடத்திற்குச் சென்றதும் நீங்கள் யாருக்கு வாக்களிக்க நினைக்கிறீர்களோ அவர்களின் பெயர் மற்றும் சின்னம் அருகில் இருக்கும் நீல பட்டனை அழுத்த வேண்டும். நீங்கள் அழுத்தியதும் சிவப்பு நிற விளக்கு பளிச்சிட்டு நீண்ட பீப் சத்தம் கேட்கும். அப்படி கேட்டால் உங்கள் ஓட்டுப் பதிவாகி விட்டது என்று அர்த்தம்.

நீங்கள் வாக்களித்தவருக்குத்தான் வாக்கு பதிவாகி இருக்கிறதா என்பதைக் கண்டறிய VVPAT யில் கண்டறியலாம்.

நோட்டா : நீங்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை. என்று நினைத்தால் நோட்டாவிற்கு வாக்களிக்கலாம்.வாக்குச் சாவடிக்கு என்ன ஆவணங்கள் எடுத்துச் செல்லலாம் :

வாக்காளர்கள் பெயர் வாக்களிக்க தகுதியானவராக இருந்தும் , உங்கள் பெயர் பட்டியலில் இடம் பெற்றும் வாக்காளர் அடையாள அட்டை இல்லை எனில் கீழே குறிப்பிடுள்ள ஆவணங்களை எடுத்துச் செல்லாம்.

பாஸ்போட்ர்

ஓட்டுநர் உரிமம்

ஆதார் அட்டை

அரசாங்கத்தில் பணி புரிபவராக இருந்தால் அந்த அடையாள அட்டை

வங்கி அல்லது அஞ்சல் துறையில் வழங்கப்பட்ட பாஸ்புக்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு அடையாள அட்டை

புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்

தொழிலாளர் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு அட்டை

தேர்தல் இயந்திரத்தால் வழங்கப்பட்ட அங்கீகாரம் பெற்ற புகைப்பட வாக்காளர் சீட்டு

சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.எல்.ஏ., எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.சி.க்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளைப் பயன்படுத்தலாம்.

ஆனால் மின் ரசீது, ரேஷன் கார்ட் , வாடகை அல்லது சொந்த வீடு கொண்ட ஆவணங்கள் போன்றவை ஏற்றுக் கொள்ளப்படாது.

தேர்தல் விதிமுறைகள்

தேர்தல் விதிமுறைகள் படி வாக்குச் சாவடிக்குள், செல்ஃபோன், கேமரா, லேப்டாப் போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...