தமிழகத்தில் 69.55% வாக்குப் பதிவு! அதிக வாக்குப் பதிவு நடைபெற்ற மூன்று தொகுதிகள்

மாநிலத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. ஒரு சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.

தமிழகத்தில் 69.55% வாக்குப் பதிவு! அதிக வாக்குப் பதிவு நடைபெற்ற மூன்று தொகுதிகள்
வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள்
  • News18
  • Last Updated: April 18, 2019, 8:43 PM IST
  • Share this:
தமிழ்நாடு முழுவதும் மதுரை மக்களவைத் தொகுதியைத் தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவு பெற்றது. 6 மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் 69.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இரண்டாம் கட்டமாக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 95 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

மாநிலத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. ஒரு சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குள் வரும் பொன்பரப்பி கிராமத்தில் இரு தரப்பினரிடையை தகராறு ஏற்பட்டது. அந்த தகராறு 20 வீடுகளின் ஓடுகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. ஒரு சில வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.


சிதம்பரம் தொகுதியில் இரு தரப்பினரிடையே மோதல்! 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சூறை

பின்னர், காவல்துறையினர் வந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடித்து விரட்டினர். அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவை முன்னிட்டு, மதுரை மக்களவைத் தொகுதி மட்டும் வாக்குப் பதிவு நேரம் 8 மணி வரை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், அந்த தொகுதியில் மட்டும் வாக்குப் பதிவு நடைபெற்றுவருகிறது. ஐந்து மணி நிலவரப்படி, ஆரணி தொகுதியில் அதிகபட்சமாக 76.49 சதவீதம் வாக்குப் பதிவானது.

அடுத்தடுத்த இடங்களில் சிதம்பரத்தில் 70.73 சதவீதமும், நாகப்பட்டினத்தில் 69.21 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக 63.73 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





Also see:

First published: April 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading