முறையாக வாக்கு எண்ணிக்கை நடந்திருந்தால் 80 முதல் 90 சதவீத இடங்களில் திமுக வெற்றி பெற்றிருக்கும் - ஸ்டாலின்

முறையாக வாக்கு எண்ணிக்கை நடந்திருந்தால் 80 முதல் 90 சதவீத இடங்களில் திமுக வெற்றி பெற்றிருக்கும் - ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
  • News18
  • Last Updated: January 4, 2020, 8:22 AM IST
  • Share this:
உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், வாக்கு எண்ணிக்கையின் போது இருந்த பல்வேறு இடையூறுகளை தாண்டி திமுக கூட்டணி இந்த வெற்றியை அடைந்துள்ளதாக கூறினார்.

இதனை அடுத்து மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.


அப்போது துரைமுருகன், டி.ஆர் பாலு,தயாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதனை அடுத்து பேசிய உதயநிதி ஸ்டாலின் முறையாக வாக்கு எண்ணிக்கை நடந்திருந்தால் 80 முதல் 90 சதவீத இடங்களில் திமுக வெற்றி பெற்றிருக்கும் என்று கூறினார்.

 
First published: January 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்