• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிமுக தலைமை அலுவலகம் முன் தொண்டர்கள் திடீர் போராட்டம்

அதிமுக தலைமை அலுவலகம் முன் தொண்டர்கள் திடீர் போராட்டம்

அதிமுக தலைமை அலுவலகம்

அதிமுக தலைமை அலுவலகம்

நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் முன் தொண்டர்கள் தீடிர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Share this:
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில்,அதிக இடங்களைக் கைப்பற்ற அதிமுக முனைப்போடு உள்ளது. எனவே, தேர்தலுக்கான வியூகம் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்று உள்ளனர். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவின் காரணமாக அந்த பதவி காலியாக உள்ளதால், அப்பதவிக்குத் தகுதியான நபரை தேர்வு செய்வது தொடர்பாகவும் முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத் துறையின் வழக்குகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடைபெறுகிறது.

    அதேபோல், அதிமுக பொன்விழாவின்போது, தி.நகரில் எம்ஜிஆர் வாழ்ந்த இல்லத்தில் சசிகலா கொடியேற்றினார். அப்போது, நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டில், கழகப் பொதுச் செயலாளர் சசிகலா எனபொறிக்கப்பட்டிருந்தது. சமீபகாலமாகவே, கழகப் பொதுச் செயலாளர் என்று பெயரிலேயே சசிகலா அறிக்கை வெளியிட்டு வருகிறார். இதற்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முன் தொ்ணடர்கள் சிலர் திடீரென ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷை மாற்றக் கோரிக்கை அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: