தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமூகநீதிக்கான குரல் தொடர்ந்து ஒலிக்கிறது: மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமூகநீதிக்கான குரல் தொடர்ந்து ஒலிக்கிறது: மு.க.ஸ்டாலின் பெருமிதம்

நூறு ஆண்டுகளுக்கு முன் வகுப்புவாரி இடஒதுக்கீடு அறிமுகமான தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமூகநீதிக்கான குரல் தொடர்ந்து ஒலிக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். விழாவில் பங்கேற்ற குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், பொன்னாடை, புத்தகம், நினைவுப் பரிசு வழங்கி கெளரவித்தார். தொடர்ந்து, விழாவில் தமிழகத்தின் முதல்வராக 5 முறை பணியாற்றியவரும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவருமான கருணாநிதியின் உருவப் படத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்.

  இதையடுத்து, விழாவில் பேசிய தமிழக முதல்வர், வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது. தமிழகத்தில் பல வரலாற்றுச் சம்பவங்கள் நடைபெற இந்த பேரவை காரணமாக இருந்திருக்கிறது. தமிழக மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் கலைஞர் என்று பேசினார்.

  Also read:  சட்டப்பேரவையில் 16வது தலைவராக கருணாநிதியின் புகைப்படத்தை திறந்து வைத்தார் குடியரசுத்தலைவர்

  இதைத்தொடர்ந்து பேசிய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் கருணாநிதியின் படத்தை திறந்ததில் மகிழ்கிறேன். உண்மையில் இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் என தமிழில் உரையாற்றினார்.

  தொடர்ந்து பேசிய அவர், தமிழக சட்டமன்ற விழாவில் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஜனநாயக அடிப்படையிலான நிர்வாகத்தை உறுதி செய்வதில் சட்டமன்றம் மிகவும் சிறப்பான அமைப்பாக உள்ளது. தேவதாசி சட்டம் ஒழிப்பு போன்ற சிறப்பான சட்டங்களை நிறைவேற்றிய சபை இது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் கருணாநிதியின் படத்தை திறந்ததில் மகிழ்கிறேன்.பதின்ம வயதிலேயே அரசியல் களம் கண்டவர் கலைஞர். தனது புரட்சிகரமான எண்ணங்களால் சமூக சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர் என புகழாரம் சூட்டினார்.  இந்நிலையில், தமிழக சட்டமன்ற பொன்விழா குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, நூறு ஆண்டுகளுக்கு முன் வகுப்புவாரி இடஒதுக்கீடு அறிமுகமான தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமூகநீதிக்கான குரல் தொடர்ந்து ஒலிக்கிறது. சமூகநீதிக்கு சோதனை வரும்போதெல்லாம் நாட்டை வழிநடத்த வேண்டிய வரலாற்றுக் கடமையை தந்தை பெரியார் காட்டிய வழியில் தொடர்ந்து செய்திடுவோம் என்று அவர் கூறியுள்ளார்.
  Published by:Esakki Raja
  First published: