• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வ.உ.சி நினைவு நாள் தியாக திருநாளாக கடைப்பிடிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வ.உ.சி நினைவு நாள் தியாக திருநாளாக கடைப்பிடிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளான நவம்பர் 18ஆம் தேதி தியாக திருநாளாக கடைப்பிடிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழக சட்டப்பேரவையில் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உறுப்பினர் ஈஸ்வரன் வஉசி 150வது பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

    இதை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது முதல் சுதந்திர தின உரையிலேயே வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்ததை சுட்டிக்காட்டினார்.

    மேலும் வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்த நாளையொட்டி தற்போது 14 புதிய அறிவிப்புகளை வெளியிடுவதாகவும் அவர் அறிவித்தார். அதன்படி,

    1) சென்னை காந்தி மண்டபத்தில் வ.உ.சி யின் நினைவை பிரதிபலிக்கும் வகையில் செக்கு மண்டபம், மார்பு அளவு சிலை நிறுவப்படும்.

    2) தூத்துக்குடி பெரிய காட்டான் சாலை இனிமேல் வ.உ.சி சாலை என்று அழைக்கப்படும்.

    3) கோவை வ.உ.சி பூங்காவில் அவரின் முழு உருவ சிலை நிறுவப்படும்.

    4) ஒட்டப்பிடாரம், நெல்லையில் உள்ள மனி மண்டபம் புனரமைக்கப்பட்டு அவரின் வரலாறு ஒளி, ஒலி காட்சி ஏற்படுத்தி தரப்படும்.

    5) வ.உ.சியின் வரலாற்றை டிஜிட்டல் வழியில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்

    6) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வ.உ.சி ஆய்வு இருக்கை வைக்கப்படும்.

    7) தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் அவரின் புத்தகங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.

    8) வ.உ.சி ,மகாகவி ஆகியோர் பயின்ற பள்ளிகளில் 1.5கோடி செலவில் புதிய கலையரங்கம் மாணவர் பலனடைய வகையில் செலவு செய்யப்படும்.

    9) கப்பல் துறையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு கப்பலோட்டிய தமிழன் விருது மற்றும் 5லட்சம்,சான்றுகள் வழங்கப்படும்.

    10) நவம்பர் 18அவரின் நினைவு நாள் தியாக திருனாளாக கடைப்பிடிக்கப்படும்

    11) தூத்துக்குடி ,நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் 5முதல் அடுத்த (2022) ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் கட்டப்படும் அரசு கட்டிடங்களுக்கு வ.உ.சி பெயர் வைக்கப்படும்.

    12) அரசு பேருந்துகளில் வ.உ.சி யின் புகைப்படங்கள், வரலாற்று பதிவுகள் புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு பள்ளி கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்படும்

    13) வ.உ.சி வரலாறு குறித்து மாணவர்களுக்கு இணையவழி கருத்தரங்கம் நடத்தப்படும்.

    14) வ.உ.சி யின் நூல்கள், கையேடுகள் இளைஞர்கள் பார்த்து பயனடையும் வகையில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: