• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகம் கோரும் ரூ.15,000 கோடியை வழங்க வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகம் கோரும் ரூ.15,000 கோடியை வழங்க வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்

தஞ்சை கலைஞர் அறிவாலயத்திலிருந்து நிவாரணப் பொருட்களுடன் ஸ்டாலின்

தஞ்சை கலைஞர் அறிவாலயத்திலிருந்து நிவாரணப் பொருட்களுடன் ஸ்டாலின்

பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு தமிழக அரசு கோரும் 15,000 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு அளிக்குமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களுக்கு தமிழக அரசு கோரும் நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திருச்சியில் திமுக சார்பில் சேகரிப்பட்ட நிவாரணப் பொருட்களை புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சை கலைஞர் அறிவாலயத்திலிருந்து நிவாரணப் பொருட்களுடன் தயாராக இருந்த லாரியை திமுக தலைவர் ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பிவைத்தார்.

தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின்


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரிடரால் தமிழகம் பாதிக்கப்படும் போதெல்லாம், தேவைப்படும் நிதியை விட மத்திய அரசு குறைந்த அளவிலேயே நிதி அளித்திருப்பதை சுட்டிக்காட்டினார்.

தஞ்சை கலைஞர் அறிவாயலத்தில் இருந்து நிவாரண பொருட்களை கொடி அசைத்து அனுப்பி வைக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்


எனவே, இந்த முறை பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு தமிழக அரசு கோரும் 15,000 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு அளிக்குமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இருப்பினும் தமிழக அரசு கோரும் நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

Also see.. அக்காலம் முதல் இக்காலம் வரை... சினிமா நடனங்களின் பரிணாம வளர்ச்சி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: