Home /News /tamil-nadu /

தேசிய அளவில் நன்மை தருவதாக கல்வி இருக்க வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தேசிய அளவில் நன்மை தருவதாக கல்வி இருக்க வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்விக் கொள்கை மாற்றப்படுவதால் பலன் கிடைப்பதில்லை எனவும், இதனால், மாநிலங்கள் இடையே சமநிலையற்ற தன்மை உள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

  • News18
  • Last Updated :
    கல்வி என்பது தனித்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை என கருத்து தெரிவித்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய அளவில் அது நன்மை தருவதாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    தென்மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய ஆளுநர், உயர்கல்வியை மாற்றி அமைக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.

    மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்விக் கொள்கை மாற்றப்படுவதால் பலன் கிடைப்பதில்லை எனவும், இதனால், மாநிலங்கள் இடையே சமநிலையற்ற தன்மை உள்ளதாகவும் ஆளுநர் கூறினார்.

    Also read... இதெல்லாம் மாணவ மாணவிகளிடம் கேட்கமுடியுமா? பள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஆசிரியர்கள் குமுறல்

    2047ஆம் ஆண்டு உலகை வழிநடத்தும் இடத்தில் இந்தியா இருக்கும் வகையில் திட்டமிட வேண்டும் எனவும் ஆளுநர் கூறினார். இதனிடையே மாணவர்களின் ஆராய்ச்சி நாட்டுக்கும், மக்களுக்கும் பயனளிப்பதாக இருக்க வேண்டும் எனக் கூறிய ஆளுநர் ரவி, சில தலைவர்களின் ஆய்வுக் கட்டுரைகளை தயாரிப்பதால் யாருக்கும் பயனில்லை என தெரிவித்தார்.

     

     
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: RN Ravi, Tamil Nadu Governor

    அடுத்த செய்தி