ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

‘துரோகம் பண்ணிட்டாங்க அம்மா.. நீங்க வரனும்’ - சசிகலா தரப்பில் மீண்டும் ஒரு ஆடியோ ரிலீஸ்

‘துரோகம் பண்ணிட்டாங்க அம்மா.. நீங்க வரனும்’ - சசிகலா தரப்பில் மீண்டும் ஒரு ஆடியோ ரிலீஸ்

சசிகலா

சசிகலா

திருப்பூரை சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகி காத்தவராயன் என்பவருடன் சசிகலா பேசும் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆடியோ மூலம் அசைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார் வி.கே.சசிகலா. மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியாக அறியப்பட்டவர் வி.கே.சசிகலா. ஜெயலலிதாவின் நிழல் போல் இருந்தவர் அ.தி.மு.கவில் கட்சி பொறுப்புகளில் இல்லையென்றாலும் கட்சியில் செல்வாக்குடனே இருந்தார். ஜெயலலிதா மரணத்துக்கு பின் சின்னம்மா அவதாரம் எடுத்தார் சசிகலா.

  சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்த நிலையில் சிறைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை அரியணையில் அமரவைத்துவிட்டு சிறைக்கு சென்றார். அதன்பின் அ.தி.மு.க-வில் காட்சிகள் மாறியது தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ் கட்சிக்குள் இணைந்தார். சசிகலா என்ற நபரையே அ.தி.மு.கவினர் தள்ளி வைத்தார். கட்சியை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வழி நடத்தத் தொடங்கினர். 2021 ஜனவரி மாதம் சசிகால் சிறையில் இருந்து விடுதலையானார்.

  Also Read: அயோத்தியில் 400 கோடி செலவில் உலகத்தரத்தில் பேருந்து நிலையம் - யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்

  அப்போது தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கும் சூழல் இருந்தால் சசிகலா தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவாறு என எதிர்பார்க்கப்பட்டது. அப்போதே அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு விஷயத்தை திட்டவட்டமாக கூறினார். வி.கே. சசிகலா, அ.ம.மு.க-வினரை மீண்டும் அதிமுகவில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்தார். சசிகலா அரசியல் ரீதியிலாக காய் நகர்த்துவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அரசியலில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் அ.தி.மு.க தோல்வியடைந்தது. தி.மு.க ஆட்சிக்கும் வந்துவிட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில் கடந்த ஒருமாதமாக அ.தி.மு.க-வினரை தொடர்புக்கொண்டு சசிகலா பேசி வருகிறார். இந்த ஆடியோ விவகாரம் அ.தி.மு.க-வில் புதிய புயலை கிளப்பியது. இந்நிலையில் நேற்று அ.தி.மு.க தலைமை அலுவலத்தில் நடந்த எம்.எல்.ஏ கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், சசிகலா அரசியலில் முக்கியத்துவத்தைத் தேடிக்கொள்ள கழகத்தை அபகரிக்கும் முயற்சியில் இறக்கப்போவதாக ஒவ்வொரு நாளும் தொலைப்பேசியில் சிலருடன் பேசுவதும், அதை ஊர் அறிய தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதுமாக வினோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.அதிமுக சட்ட திட்டங்களுக்கு மாறாகவும், இயக்கத்தின் லட்சியங்களுக்கு விரோதமாகவும் செயல்படுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது தயவு தாட்சன்யமின்றி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பது.

  அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் புகழேந்தி உட்பட 16 பேர் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டனர். இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகி காத்தவராயன் என்பவருடன் சசிகலா பேசும் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. காத்தவராயன் அவினாசி சட்டமன்றத் தொகுதி அம்மா பேரவையின் மாவட்ட பொறுப்பாளராக இருக்கிறார். அந்த ஆடியோவில் சசிகலா காத்தவராயனிடம் நலம் விசாரித்தார். நீங்க இல்லாதது ரொம்ப குறையா இருக்குங்க அம்மா... நீங்க கட்டாயம் அரசியலுக்கு வரனும் என காத்தரவராயன் கூறுகிறார்.

  இதற்கு பதிலளித்த சசிகலா, கட்டாயம் அரசியலுக்கு வருவேன். தொண்டர்கள் தொடர்ந்து என்னிடம் இதை கூற ஆரம்பித்துவிட்டார்கள். நான் நிச்சயம் வந்துவிடுவேன் கவலைப்படாதீங்க. கூடிய விரைவில் எல்லோரையும் சந்திக்கிறேன். என்றார். அப்போது குறுக்கிட்ட காத்தவராயன், எடப்பாடி ஐயாக்கிட்ட ஆட்சியை கொடுத்துவிட்டு போனீங்க. ஆனா அவரு இப்ப துரோகம் பண்ணிட்டாரு.. என்றார். அதற்கு பதிலளித்த சசிகலா எல்லோரும் ஒரே மாதிரி இருக்கமாட்டாங்க. கையில் 5 விரல்கள் இருக்கு அதுமாதிரிதான் நாம எடுத்துக்கனும். இப்ப கட்சியை சரிப்படுத்தி நல்ல நிலைக்கு கொண்டு வரனும். அம்மா சொன்னதுபோல நூறாண்டுகள் ஆனாலும் கட்சி பெரிதாக வளர்ந்து இருக்க வேண்டும். அதை தொண்டர்களின் உதவியோடு செய்வேன். சீக்கிரம் நல்லது நடக்கும் என்றார். காத்தவராயன் குடும்பத்தினருடன் சசிகலா பேசியதோடு அந்த ஆடியோ நிறைவடைந்தது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: ADMK, Phone audio, Sasikala, VK Sasikala