ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Sasikala Audio| ”துணிச்சலுடன் மீண்டு வருவோம்.. தொண்டர்களின் உரிமைக்குரல்தான் ஜெயிக்கும் ”- சசிகலா பேச்சு

Sasikala Audio| ”துணிச்சலுடன் மீண்டு வருவோம்.. தொண்டர்களின் உரிமைக்குரல்தான் ஜெயிக்கும் ”- சசிகலா பேச்சு

சசிகலா

சசிகலா

கட்சியை நல்லபடியாக கொண்டு வந்து அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சசிகலா அதிமுக தொண்டர்களிடம் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.

அதிமுக, சசிகலா ஆடியோ விவகாரம் ஓய்ந்தபாடில்லை. சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் கட்சியிலே இல்லை என்கிறது அதிமுக தலைமை. சசிகலாவுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் மீது கட்சி சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டது. பெங்களூரு புகழேந்தி உள்ளிட்ட சில நிர்வாகிகள் கூட கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இருப்பினும் சசிகலா தினந்தோறும் தொண்டர்களிடம் தொலைபேசியில் பேசும் ஆடியோக்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

Also Read: Ration Card: ரேஷன் கார்டு விண்ணப்பத்துக்கு ஆர்வம்.. முடங்கி கிடக்கும் இணையதள சேவை

ஜெயலலிதா தோழி எனப் அறியப்படும் சசிகலா நேற்று சில அ.தி.மு.க தொண்டர்களிடம் பேசியுள்ளார். அதில், “அ.தி.மு.க தனிநபருக்கான கட்சி கிடையாது. ஒரு பெண்ணாக இருந்து அம்மா நல்லாட்சி தந்தார். மக்களுக்கு எண்ணற்ற உதவிகளை செய்தார். தொண்டர்கள் உறுதுணையுடன் எதையும் என்னால் செய்ய முடியும்.தொண்டர்கள் கவலைப்படாமல் இருக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொண்டர்களின் மனக்குமுறல்கள் நன்றாக தெரிகிறது. கட்சியை நல்லபடியாக கொண்டு வந்து அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம்.முருகன் அருளால் நல்லதே நடக்கும்.பெண் என்றாலே அக்கிரமங்கள் நடக்கத்தான் செய்யும். இதையெல்லாம் அம்மா போராடி வென்று வந்தார்.பொதுவாக பெண்களுக்கு அதிக வைராக்கியம் இருக்கும். எனவே இந்த நிலைமையில் இருந்து துணிச்சலுடன் மீண்டு வரமுடியும். ஒன்றரைக் கோடி தொண்டர்களின் உரிமைக்குரல்தான் என்றைக்கும் ஜெயிக்கும். எனவே அது நிச்சயம் நடக்கும்” எனக் கூறியுள்ளார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: ADMK, Phone audio, Political, Sasikala, Tamilnadu, VK Sasikala