• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மக்களை பார்க்க நீந்தி வந்துள்ளேன்: சசிகலா!

மக்களை பார்க்க நீந்தி வந்துள்ளேன்: சசிகலா!

சசிகலா

சசிகலா

பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி பேசிய சசிகலா, தனது வீட்டையும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாகவும் மக்களை பார்ப்பதற்காக நீந்தி வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

  • Share this:
    சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சசிகலா சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார். அப்போது பேசிய அவர், தனது வீட்டை சுற்றியும் வெள்ள நீர் தேங்கியிருப்பதாகவும் மக்களை பார்ப்பதற்காக நீந்தி வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    சென்னையில் கடந்த இரு வாரத்திற்கு முன்னதாக ஏற்பட்ட கனமழையின் காரணமாக பல்வேறு தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வி.கே.சசிகலா பார்வையிட்டு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார். இதன் தொடர்ச்சியாக இன்று பூந்தமல்லியில் உள்ள கண்டோன்மெண்ட் பகுதியில் சசிகலா ஆய்வு செய்தார்.

    குடிசை வீடுகளுக்குள் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்த சசிகலா அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதேபோல், ஒரு வீட்டில் சாதம் வெந்துள்ளதா என்பதையும் அவர் சரி பார்த்தார். இதேபோல், விபத்தில் காயமடைந்த நரசிம்மன் என்பவர் வீட்டுக்கு சென்ற சசிகலா அவரை நலம் விசாரித்தார்.

    அதன் பின்னர் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை சசிகலா வழங்கினார். அப்போது பேசிய சசிகலா, தனது வீட்டையும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாகவும் மக்களை பார்ப்பதற்காக நீந்தி வந்துள்ளதாகவும் தெரிவித்தார். ‘ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகரம் எந்த கஷ்டத்தில் உள்ளது என்பதை தெரிந்துகொண்டேன். ஜெயலலிதா சொன்னதை காப்பாற்ற என்னால் முயன்ற உதவிகளை செய்வேன்’ என்று சசிகலா குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: கமல்ஹாசனுக்கு கொரோனா: அமெரிக்கா சென்று திரும்பிய நிலையில் தொற்று உறுதி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: