Home /News /tamil-nadu /

விரைவில் அரசியல் சுற்றுப் பயணத்தை தொடங்குவேன் - வி.கே.சசிகலா அதிரடி

விரைவில் அரசியல் சுற்றுப் பயணத்தை தொடங்குவேன் - வி.கே.சசிகலா அதிரடி

சசிகலா

சசிகலா

VK Sasikala : விரைவில் அரசியல் சுற்றுப் பயணத்தை தொடங்க இருப்பதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு செய்வேன் எனவும் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

    சொத்து குவிப்பு வழக்கில் சிறைச் சென்று திரும்பிய சசிகலா, பெங்களூரு சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு, அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்த வழக்கு, அந்நிய செலாவணி வழக்கு, மற்றும் கோடநாடு வழக்கு என்று தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். இதற்கிடையில், தொண்டர்களிடம் தொலைபேசியில் பேசி பரபரப்பை கிளபினார். தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம் ‘நான் விரைவில் வந்துவிடுவேன்’ என்று நம்பிக்கை ஏற்படுத்தினார்.

    இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி ராகு-கேது பெயர்ச்சி அன்று, வி.கே. சசிகலா தனது முதற்கட்ட ஆன்மிகப் பயணத்தை தஞ்சாவூரில் தொடங்கி, திருச்சியில் முடித்தார். அதனைத் தொடர்ந்து,  ஏப்ரல் 11 ஆம் தேதி தனது, 2 ஆம் கட்ட ஆன்மிக சுற்றுப் பயணத்தை திருச்சியில் தொடங்கினார்.

    சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகள் அருள்பாலிக்கும், சமயபுரம் டோல்கேட் அருகிலுள்ள உத்தமர்கோவிலில் முதலில் சுவாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து, முசிறி அருகே திருவாசி மாற்றுரைதீஸ்வரர் கோயில், குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.

    தொடர்ந்து நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் தரிசனம் செய்த கையோடு, எடப்பாடி, சேலம் ராஜகணபதி கோயிலில் ஆன்மீக சுற்றுப் பயணத்தை நிறைவுச் செய்தார். அன்றைய தினமே, சசிகலாவின் அதிமுக பொதுச்செயலாளர் பதவி செல்லாது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கோடநாடு பங்களாவில் 2017-ம் ஆண்டு நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக, தனிப்படை போலீசார் சசிகலாவிடம் நூற்றுக் கணக்கான கேள்விகளை கேடடு விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, கோடநாடு பங்களாவின் சாவி வழக்கமாக யாரிடம் இருக்கும், துணை மேலாளராக பணியாற்றிய தினேஷுக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் என்ன என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுப்பினர்.

    மேலும், கொலை, கொள்ளை சம்பவம் நிகழ்ந்த போது பங்களாவின் பொறுப்பு யாரிடம் இருந்தது என்றும் ஜெயலலிதா அறையிலும், தங்கள் அறையிலும் என்னென்ன ஆவணங்கள் இருந்தன என்றும் சசிகலாவிடம் வினவினர். அனைத் தொடர்ந்து, அவரை கோடநாடு பங்களாவிற்கு நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும் திட்டமிட்டிடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    Must Read : 15 ஆண்டுகாலமாக மின்சாரம் இன்றி தவிக்கும் பொதுமக்கள்.. நூதன முறையில் போராட்டம்

    இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் வி.கே.சசிகலா. அப்போது, ஆன்மீக பயணத்தை நிறைவு செய்த நிலையில் அரசியல் பயணத்தை எப்போது தொடங்க போகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சசிகலா, விரைவில் அரசியல் சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளேன் என்றார். பொதுச்செயலாளர் வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நிச்சயம் விரைவில் மேல்முறையீடு செய்வேன் எனவும் கூறியுள்ளார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Sasikala

    அடுத்த செய்தி