அடுத்த பிளான் இதுதான்... அதிமுக மகளிர் நிர்வாகியிடம் பேசிய சசிகலாவின் புதிய ஆடியோ

சசிகலா - அதிமுக மகளிர் நிர்வாகி

சசிகலாவுடன் அதிமுக மகளிர் அணி இனை செயலாளர் சண்முக பிரியா பேசும் புதிய தற்போது வெளியாகி உள்ளது.

  • Share this:
    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா கடந்த ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார். பெங்களூருவில் இருந்து தமிழகம் திரும்பிய சசிகலாவிற்கு வழிநெடுங்கிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சசிகலா விடுதலையான உடன் அதிமுக தலைமை பொறுப்பேற்பார் என்றும் தீவிர அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென அரசியிலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

    இந்நிலையில் அதிமுக  நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் என பலரிடமும் சசிகலா பேசும் ஆடியோ தொடர்ந்து வெளியாகிக் கொண்டுள்ளது.  கடந்த ஒருமாதமாக அ.தி.மு.க-வினரை தொடர்புக்கொண்டு சசிகலா பேசி வருகிறார். இந்த ஆடியோ விவகாரம் அ.தி.மு.க-வில் புதிய புயலை கிளப்பியது. இதனால் அ.தி.மு.க தலைமை அலுவலத்தில் நடந்த எம்.எல்.ஏ கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், சசிகலா அரசியலில் முக்கியத்துவத்தைத் தேடிக்கொள்ள கழகத்தை அபகரிக்கும் முயற்சியில் இறக்கப்போவதாக ஒவ்வொரு நாளும் தொலைப்பேசியில் சிலருடன் பேசுவதும், அதை ஊர் அறிய தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதுமாக வினோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.

    அதிமுக சட்ட திட்டங்களுக்கு மாறாகவும், இயக்கத்தின் லட்சியங்களுக்கு விரோதமாகவும் செயல்படுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது தயவு தாட்சன்யமின்றி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பது. இதையடுது்து அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் புகழேந்தி உட்பட 16 பேர்  அதிரடியாக நீக்கப்பட்டனர்.

    சசிகலாவுடன் பேசும் அதிமுக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சி தலைமை எச்சரித்தும் பலர் அவருடன் பேசி வருகின்றனர். இந்நிலையில்  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த அதிமுக மகளிர் அணி இனை செயலாளர் சண்முக பிரியாவிடம்  சசிகலா பேசிய ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது.

    அதில், நியாமகவும் நல்லது விதமாகவும் கட்சியை கொண்டு போனும் கட்டாயம் இருக்கு அந்த கட்டயாத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.ஊராடங்கு முடிந்தவுடன் சுற்றுபயணம் அனைத்து இடங்களிலும் வருவேன். மீண்டும் தலைமை பொறுப்புக்கு வந்து அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை வழிநடத்துவேன் என்று அவர் பேசும் ஆடியோ தற்போத வெளியாகி உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: