• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வாக்காளர் பட்டியலில் சசிகலாவின் பெயர் திட்டமிட்டு நீக்கம் - அமமுக குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியலில் சசிகலாவின் பெயர் திட்டமிட்டு நீக்கம் - அமமுக குற்றச்சாட்டு

சசிகலா

சசிகலா

வாக்காளர் பட்டியலிலிருந்து சசிகலாவின் பெயர் திட்டமிட்டு நீக்கப்பட்டு இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் குற்றம்சாட்டியுள்ளது.

  • Share this:
தமிழகத்தில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியலில் சசிகலாவின் பெயர் இடம்பெறவில்லை என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் வைத்தியநாதன்
சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் மூலமாக தேர்தல் ஆணையத்திற்கு 15 நாட்களுக்கு முன்பே புகார் தெரிவிக்கப்பட்டும் அவரது பெயரை சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்..

சசிகலாவின் பெயர் நீக்கப்படும் போதே இதுகுறித்து சசிகலாவிற்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டும் என்று கூறிய வைத்தியநாதன், பெயர் நீக்கப்பட்ட விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் தலையீடு இருப்பதாக கூறினார்.

சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு வாக்கு சீட்டு முறையில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் தேர்தல் ஆணையம் ஆயிரம்விளக்கு தொகுதி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் சசிகலாவின் பெயர் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு நீக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: