ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

என் மீது பழிபோடுவது புதிதல்ல.. நான் சொல்வதை கேட்க அப்பல்லோ சாதாரண மருத்துவமனையா? - சசிகலா கொந்தளிப்பு

என் மீது பழிபோடுவது புதிதல்ல.. நான் சொல்வதை கேட்க அப்பல்லோ சாதாரண மருத்துவமனையா? - சசிகலா கொந்தளிப்பு

ஜெயலலிதா - சசிகலா

ஜெயலலிதா - சசிகலா

என்னை அரசியலில் இருந்து ஓரம்கட்ட வேண்டும் என்றால் வேறு வழிகளை தேர்ந்தெடுத்திருக்கலாம். அம்மா மரணத்தை அரசியலாக்கியது கொடுமையானது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அரிசியலாக்குவதை பொதுமக்கள் யாரும் ஏற்கமாட்டார்கள் என வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.

  ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கைக்கு பதில் தெரிவித்து  வி.கே. சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “நியாயம் தோற்காது, உண்மைக்கு என்றும் வலிமை அதிகம். அதைவிட என் அக்கா, நம் இதயதெய்வம் அம்மா அவர்கள் என் அருகிலேயே இருந்து நடப்பவை எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

  என் மீது பழி போடுவதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது போன்று என் மீது பழிபோடுவது எனக்கு ஒன்றும் புதிது இல்லை என்று கூறிய அவர், என்றைக்கு நான் அம்மா அவர்களின் கரத்தை பிடித்தேனோ அன்றே ஆரம்பமானது இந்த பழிபோடும் படலம் என தெரிவித்துள்ளார்.

  ஜெயலலிதாவிற்கு  புகழஞ்சலி செலுத்துவதற்கு பதிலாக, அவருடைய மரணத்தையே அரசியலாக்கினார்கள் திமுகவினர். அதற்கு நம் கட்சியினரையே பலிகாடாக ஆனது தான் வேதனையான ஒன்று என கூறியுள்ளார்.

  இதையும் படிங்க | இது நடந்திருந்தால் ஜெயலலிதா உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும்- ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் தகவல்

  என்னை அரசியலில் இருந்து ஓரம்கட்ட வேண்டும் என்றால் அதற்கு வேறு வழிகளை தேர்ந்தெடுத்து இருக்கலாம், அதற்கு அம்மா அவரின் மரணத்தை சர்ச்சை ஆக்கியதுதான் மிகவும் கொடுமையானது.

  இந்த ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டது போல் அம்மாவின் மருத்துவ சிகிச்சையில் ஒரு போதும் நான் தலையிட்டதில்லை, அவ்வாறு கருத்துக்களை சொல்லக்கூடிய அளவுக்கு மருத்துவ படிப்பு நான் படித்தது கிடையாது. எந்த விதமான பரிசோதனைகளை செய்ய வேண்டும் என்ற முடிவை மருத்துவ குழுவினரே தான் முடிவெடுத்து சிகிச்சை வழங்கினார்கள்.

  என்னுடைய நோக்கமெல்லாம் அம்மாவுக்கு முதல் தர சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது தான். என்னுடைய ஆலோசனைகளை பெற்று மருத்துவ சிகிச்சை அளிக்கக்கூடிய அளவில் அப்பல்லோ மருத்துவமனை ஒரு சாதாரண மருத்துவமனை கிடையாது என தெரிவித்துள்ளார்.

  அம்மாவை வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க நான் என்றைக்குமே தடையாக இருந்தது இல்லை. அதே போல் அம்மாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்வது தொடர்பாக எந்த தேவையும் ஏற்படவில்லை என விளக்கமளித்துள்ளார்.

  எத்தனை முறை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அம்மா மரணத்தை பற்றி விசாரித்து கொண்டே இருக்கலாம். ஆனால் உண்மை என்றைக்கும் மாறாது. ஜெயலலிதா அம்மாவின் மரணத்தில் எந்த சந்தேகமும் கிடையாது. அம்மா அவர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில், முறையான சிகிச்சைகள் அளித்து நன்றாக குணமடைந்து வீட்டிற்கு திரும்ப இருந்த நிலையில், துரதிஷ்டவசமாக நம்மை விட்டு சென்றார் என்பதே எதார்த்தமான உண்மை என குறிப்பிட்டுள்ளார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Jayalalithaa Dead, V K Sasikala, VK Sasikala