விசாரணை ஆணையம் முன்பு விவேக் ஆஜர்

news18
Updated: February 13, 2018, 12:12 PM IST
விசாரணை ஆணையம்  முன்பு விவேக் ஆஜர்
விவேக் ஜெயராமன்
news18
Updated: February 13, 2018, 12:12 PM IST
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்காக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமன் ஆஜராகியுள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்தார். ஜெயலலிதா இறப்பில் சந்தேகம் இருப்பதாக தொடர்ந்து அனைவரும் கூறி வந்த நிலையில் தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை  ஆணையம் அமைத்தது.

இதையடுத்து ஜெயலலிதாவுடன் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அப்பல்லோ   மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர்கள்,  ஜெயலலிதாவின் தனிச் செயலாளர்கள், ஜெயலலிதாவுடன் உடன் இருந்தவர்கள் அனைவரிடமும் இந்த ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணபிரியா ஏற்கெனவே விசராணை ஆணையம் முன்பு ஆஜராகி பதிலளித்திருந்தார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் தீபக் ஆகியோரும் ஆஜராகி விளக்கமளித்தனர்.  அனைவரது வாக்குமூலங்களும் பிரமாண பத்திரங்களாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே  இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் ஆஜராகும் படி விசாரணை ஆணையம் கடந்த 9-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. இந்தச் சம்மனை ஏற்று விவேக் ஜெயராமன் இன்று விசராணை ஆணையம் முன்பு ஆஜரானார்.
First published: February 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...