ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்டச்செயலாளர் பதவி- பார்வை மாற்றுத்திறனாளியின் சாதனை பயணம்

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்டச்செயலாளர் பதவி- பார்வை மாற்றுத்திறனாளியின் சாதனை பயணம்

பாரதி அண்ணா

பாரதி அண்ணா

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளராக பார்வை மாற்றுத்திறனாளியான பாரதி அண்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  செங்கல்பட்டில் கண் பார்வையில்லாத மாற்றுத் திறனாளி ஒருவர் மாபெரும் கட்சியின் மாவட்டச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்;

  ஒளி படைத்தக் கண்ணினாய் உறுதி கொண்ட நெஞ்சினாய் வா என்றான் பாரதி. இந்த பாரதிக்கு ஒளியில்லா கண்கள். ஆனால் உறுதி கொண்ட நெஞ்சம் மட்டும் தாராளம். இதனால்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்கிற மிகப்பெரிய பொறுப்பை பெற்றுள்ளார் பாரதி.

  செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த பாக்கம் என்ற கிராமத்தில் பிறந்தவர் பாரதி அண்ணா. சிறுவயது முதலே பார்வை குறைபாடு கொண்ட இவருக்கு கடந்த 2014 முதல் முற்றிலும் கண் பார்வை பறிபோய் விட்டது. அதனால் மனமுடைந்து, நிலைகுலைந்து வீட்டுக்குள் முடங்காமல் மக்கள் உரிமைக்காக தொடர்ந்து களத்தில் இருந்து வருகிறார் பாரதி.

  இந்த வேகத்திற்கும் விவேகத்திற்கும் தடை போட முடியாததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவரை செங்கல்பட்டு மாவட்டத்தின் மாவட்ட செயலாளராக தேர்வு செய்துள்ளது. பல துறைகளில் பார்வைத் திறன் இல்லாதவர்கள் பரிணமிப்பது சாத்தியம். ஆனால் அரசியலில் ஜொலிக்க முடியுமா என்பது அனைவருக்கும் எழும் கேள்வி தான். அரசியலில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் கூட முகத்திற்கு முன்பு ஒரு மாதிரியும் முதுகுக்குப் பின்னால் வேறு மாதிரியும் இருக்கும் மனிதர்களால் நிலை குலைந்து போவார்கள். தன்னால் நிச்சயம் இதில் வெற்றி பெற முடியும் என்றார் பாரதி. எப்படி என்று கேட்டால்; இது பிழைப்பு அரசியல் அல்ல, உரிமைக்கான களம் என்கிறார்.

  நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும்- மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

  அப்பா தமிழாசிரியர் என்பதால் பாரதி அண்ணா என்ற பெயரோடு 1984 முதல் மார்க்சிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளில் தொடர்ந்து பயணித்து வருகிறார். தற்போது மாவட்டச் செயலாளர் என்ற பொறுப்பு கிடைத்தாலும் மாநில அளவில் தனது செயல்பாடுகள் இருக்கும் என்று வார்த்தைகளில் நம்பிக்கை விதைகளை தூவுகிறார். ஒரு வேளை திடீரென பார்வை மீண்டும் கிடைத்தால் தனது பயணம் இன்னும் வேகம் எடுக்கும் என்கிறார் பாரதி. அரசியல் களத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதிய முன்னெடுப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. மற்றக் கட்சிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய அங்கிகாரமும், பொறுப்பும் தந்தால் பெரும் திருப்பம் வருமென்பது பாரதியின் விருப்பம்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Marxist Communist Party