தமிழகத்திலேயே முதன் முறையாக...! பார்வை திறன் இல்லா மாணவி நிகழ்த்திய சாதனை

தமிழகத்திலேயே முதன்முறையாக கடலூரில் பார்வையிழந்த மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் உதவியாளர் இல்லாமல் தொழில்நுட்ப வசதியுடன் சுயமாக CBSE 10-ம் வகுப்பு தேர்வெழுதி அசத்தியுள்ளார்.

தமிழகத்திலேயே முதன் முறையாக...! பார்வை திறன் இல்லா மாணவி நிகழ்த்திய சாதனை
மாணவி ஓவியா
  • News18
  • Last Updated: July 22, 2020, 11:08 AM IST
  • Share this:
கடலூர் நெய்வேலியைச் சேர்ந்த மாணவி ஓவியா. பார்வை மாற்றுத்திறனாளியான இவர் இந்த ஆண்டு சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பில் எடுத்திருக்கும் மதிப்பெண்ணோ 500-க்கு 447.

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் பணி புரியும் விஜயராஜ், கோகிலா தம்பதியின் மகளான ஓவியாவுக்கு 4 வயது வரை முழுமையான பார்வை திறன் இருந்துள்ளது. நான்காம் வயதில் பார்வை திறன் குறைவதை கண்டறிந்த பெற்றோர் மருத்துவரை அணுகியுள்ளனர். அப்போதுதான் தெரிந்திருக்கிறது ஓவியாவிற்கு விழித்திரை பாதிப்பால் பார்வை திறன் குறைந்து போகபோக முற்றிலும் பார்வை பறிபோகும் என்று.

ஆரம்பத்தில் செய்வதறியாது தவித்த விஜயராஜ், பின் இருள் சூழ்ந்த உலகை கையாள தனது மகளை தயார்படுத்த தொடங்கியிருக்கிறார். ஓவியா 6-ஆம் வகுப்பு படிக்கும் போது முழு பார்வையும் பறி போக, மடிக்கணினியில் ஸ்க்ரீன் ரீடர் மென்பொருள் மூலம் படிக்க கற்று கொடுத்துள்ளனர். அதோடு தட்டச்சு பயிற்சியும் கொடுத்திருந்ததால் படிப்பை தடையின்றி தொடர வழி பிறந்தது.


 

தொடர்ந்து ஓவியாவும் விடா முயற்சியுடன் படித்த போதும், அவருக்கு கணிதமும், தமிழும் படிப்பதில் சிரமம் இருந்துள்ளது. இந்நிலையில் விஜயராஜ் முழு முயற்சி எடுத்து நூல்களை கொண்டு வரைபடம் வரைந்து அடிப்படை கணிதம் கற்பிக்க தொடங்கியிருக்கிறார். இதே போன்று கோகிலாவும் தமிழை பயிற்றுவித்திருக்கிறார். இந்த விடாமுயற்சி நாயகியிடம் உங்கள் கனவு என்னவென்று கேட்டால், அதற்கு அவர் கூறும் பதிலே அவரின் தன்னம்பிக்கையின் பலத்தை காட்டுகிறது.
 

பிறப்பிலேயே பார்வையில்லாதவர்களை விட உலகை கண்டு ரசித்த பின் பார்வை பறிபோவது என்பது கூடுதல் வலியையே கொடுக்கும். ஆனால் . தனக்கு கிடைத்தது போன்ற உதவிகளும், தொழில் நுட்ப வசதிகளும் தன்னை போன்ற பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்க வேண்டும் என்று கூறும் ஓவியாவின் வாக்கு நிறைவேறுமாயின் இவரை போன்று பல ஓவியாக்கள் நிச்சயம் வெல்வர்.

 
First published: July 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading