ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்தது. காங்கிரஸுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அண்மையில் பரப்புரையும் மேற்கொண்டிருந்தார். அப்போது பேசிய அவர், “விஸ்வரூபம் படம் வெளியான போது என்னை தடுமாற வைத்து சிரித்தார் ஓர் அம்மையார். கலைஞர் என்னை தொடர்பு கொண்டு ஏதாவது உதவி வேண்டும் என கேட்டார். இது தேச பிரச்சினை அல்ல. நான் பார்த்துகொள்கின்றேன் என்றேன். உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் கேளுங்கள் நான் இருக்கின்றேன் என்றார் ஸ்டாலின்” என்று பேசினார்.
விஸ்வரூபம் படம் பற்றி கமல் பேசியது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக நியூஸ் 18 தமிழின் வணக்கம் தமிழ்நாடு நிகழ்ச்சியில் விளக்கம் அளித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி. ஜெயலலிதா குறித்த கமல்ஹாசனின் குற்றச்சாட்டு அபாண்டமானது என்று குறிப்பிட்ட அவர், “விஸ்வரூபம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு படம் வெளியாக அம்மா உதவினார். அம்மா உதவவில்லை என்றால் விஸ்வரூபம் படமே வெளியாகி இருக்காது. திமுக கூட்டணியில் இருப்பதால் கமல்ஹாசன் அவதூறாகப் பேசுகிறார் என்று விளக்கினார்.
மேலும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி மட்டுமே வைத்துள்ளதாகவும், அதிமுகவின் கொள்கைகள் வேறு என்றும் கூறிய வேலுமணி, “பாஜகவுக்கு பயப்படுவது திமுகதான். திமுகவின் கூட்டணிக் கட்சிகள் அக்கட்சிக்கு அடிமையாக உள்ளன. அந்த வரிசையில் கமல்ஹாசனும் இணைந்துள்ளார்” என்று விமர்சித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jayalalithaa, Kamalhaasan, S.P. Velumani