வாக்காளர்களுக்கு முகக்கவசம் அணிவித்து பிரச்சாரம் செய்த திமுக வேட்பாளர்

மாஸ்க் அணிவித்த திமுக வேட்பாளர்

அனைவரும் பாதுகாப்பாக இருக்க வைரஸ் பரவலை தடுக்க முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்...

 • Share this:
  கொரோனா குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர்களுக்கு முகக்கவசம் அணிவித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்,  விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா.

  சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் இளம் வேட்பாளர் பிரபாகர் ராஜா, தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வீதீ வீதியாக சென்று தாய்மார்கள், கடைகள், கல்லூரி மாணவ மாணவிகளிடம்  தீவிர வாக்கு சேகரிப்பில்  ஈடுப்பாட்டார். அப்போது  தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் வாக்களர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வைரஸ் பரவலை தடுக்க முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும்,  முககவசத்தை அவரே அணிவித்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

  அத்துடன், பிரபாகர் ராஜா வாக்காளர்கள் வீடுகளில் பழரசம் அருந்தினார். கமல், சீமான் போன்றோர் படத்தில் மட்டுமே நடித்ததாகவும் திமுகதான் பெண்களுக்கு சமூக நீதியையும், சமஉரிமையையும் பெற்று தந்த கட்சி என துண்டு பிரசுரங்களை  வழங்கி உதயசூரியன் சின்னத்தில் தாய்மார்கள் வாக்களித்து தன்னை வெற்றிபெற செய்யுமாறு கேட்டு கொண்டார்.

  Must Read :  மு.க.ஸ்டாலின் vs பழனிசாமி: வசீகரத் தலைவர்கள் இல்லாத தேர்தல் - களநிலவரம் யாருக்கு சாதகம்

   

  முன்னதாக குழந்தைகள் ரோஸ் கொடுத்தும், பொதுமக்கள் மற்றும் கூட்டணி  கட்சி தொண்டர்கள் மாலை அணிவித்தும் அப்பகுதி  பெண்கள் ஆரத்தி எடுத்தும் மேளதாளம் பட்டாசுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் இணைந்து கூட்டணி கட்சிகளான விசிக, காங்கிரஸ் கட்சி  தொண்டர்ளும் வாக்கு சேகரிப்பில் ஈடுப்ட்டனர்.
  Published by:Suresh V
  First published: