Home /News /tamil-nadu /

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு: 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு: 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!

பாலியல் வன்கொடுமை வழக்கு

பாலியல் வன்கொடுமை வழக்கு

கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் உள்ள 4 பள்ளி மாணவர்களிடம் கடந்த 1ம் தேதி 4மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் 2 முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    விருதுநகரில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி பிரவீன் ஆகிய 4 பேரை கடந்த 29ஆம் தேதி 6 நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுத்தது. நான்கு பேரிடம் கடந்த 6 நாட்களாக கூட்டாகவும் தனித்தனியாகவும் குறுக்கு விசாரணையும், பாலியல் வன்கொடுமை நடைபெற்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றும் சிபிசிஐடி காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது.

    மேலும் அவர்களின் செல்போன்களை ஆய்வு செய்து, சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட குடோனிலிருந்து போதை ஊசிகள் போதை மாத்திரைகள் சிக்கியுள்ளது.

    தமிழக ஆளுநரின் தேநீர் விருந்து: திமுக, காங்கிரஸ் கட்சிகளும் புறக்கணிப்பதாக அறிவிப்பு..

    4 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும் செல்போன்களை ஆய்வு நடத்தியதன் அடிப்படையிலும் 4 பேருடைய சக நண்பர்கள் 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அனைவரிடமும் நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை வாக்குமூலமாக சிபிசிஐடி போலீசார் பெற்றுள்ளனர்.

    இதனிடையே கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் உள்ள 4 பள்ளி மாணவர்களிடம் கடந்த 1ம் தேதி 4மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் 2 முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் சிலர் சிக்கலாம் என கூறப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு மட்டும் தொடர்பு உள்ளதாக சிபிசிஐடி தரப்பில் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், இவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய சிபிசிஐடி எஸ்.பி. உள்ளிட்டோர் பரிந்துரை செய்தனர்.

    அதன் பேரில், 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனைத்தொடர்ந்து, மதுரை மத்திய சிறையில் இருக்கும் 4பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Virudunagar

    அடுத்த செய்தி