முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Sattur Fire Accident: பாதிக்கப்பட்டவர்களை நினைக்கும்போது மனம் வேதனையடைகிறது - ராகுல் காந்தி இரங்கல்

Sattur Fire Accident: பாதிக்கப்பட்டவர்களை நினைக்கும்போது மனம் வேதனையடைகிறது - ராகுல் காந்தி இரங்கல்

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பட்டாசு வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டுவருகின்றன. இந்தியா முழுவதுக்கும் இங்கிருந்து பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டுவருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இந்த பட்டாசு தொழிலை நம்பியே இருந்துவருகிறது. இருப்பினும், பட்டாசு ஆலைகளில் தொடர்ச்சியாக வெடிவிபத்து ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்துவருகிறது. அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் விபத்து தொடர்ந்துவருகிறது. இந்தநிலையில், சாத்தூர் பகுதியிலுள்ள அச்சம்குளம் கிராமத்திலுள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால் 10-க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்தன.

இந்த விபத்தில் சிக்கி இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 36 பேர் படுகாயமடைந்து அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ட்விட்டர் பதிவில், ‘தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்னமும் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிப்பர்களை நினைக்கும்போது மனம் வேதனையடைகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மீட்பு உதவிகள், நிவாரண உதவிகள் வழங்கவேண்டும் என்று மாநில அரசைக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

top videos
    First published:

    Tags: Fire accident, RahulGandhi, Sattur