Sattur Fire Accident: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்ச நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி

Sattur Fire Accident: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்ச நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக தலா 2 லட்ச ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டுவருகின்றன. இந்தியா முழுவதுக்கும் இங்கிருந்து பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டுவருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இந்த பட்டாசு தொழிலை நம்பியே இருந்துவருகிறது. இருப்பினும், பட்டாசு ஆலைகளில் தொடர்ச்சியாக வெடிவிபத்து ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்துவருகிறது. அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் விபத்து தொடர்ந்து வருகிறது.

    இந்தநிலையில், சாத்தூர் பகுதியிலுள்ள அச்சம்குளம் கிராமத்திலுள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால் 10-க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்தன. இந்த விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த பட்டாசு விபத்து குறித்து பிரதமர் மோடி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘தமிழ்நாட்டின் விருதுநகரிலுள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோகமான நேரத்தில் என்னுடைய சிந்தனைகள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துடன் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். களத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அதிகாரிகள் உழைத்துக்கொண்டிருக்கின்றனர்.


    இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்ச ரூபாய் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: