விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டுவருகின்றன. இந்தியா முழுவதுக்கும் இங்கிருந்து பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டுவருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இந்த பட்டாசு தொழிலை நம்பியே இருந்துவருகிறது. இருப்பினும், பட்டாசு ஆலைகளில் தொடர்ச்சியாக வெடிவிபத்து ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்துவருகிறது. அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் விபத்து தொடர்ந்து வருகிறது.
இந்தநிலையில், சாத்தூர் பகுதியிலுள்ள அச்சம்குளம் கிராமத்திலுள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால் 10-க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்தன. இந்த விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாத்தூர் - அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பள்ளி மாணவி உட்பட 11 பேர் பலியான செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ஆழ்ந்த இரங்கல்!
இதுபோன்ற விபத்துகள் @CMOTamilNadu-வின் ஆட்சியில் சாதாரணமாகி விட்டது!
உயிரிழப்புக்கு போதிய நிவாரணமும், விபத்துகள் தொடராமல் தடுப்பதும் அவசியம்!
இந்த பட்டாசு விபத்து குறித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ‘சாத்தூர் - அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பள்ளி மாணவி உட்பட 11 பேர் பலியான செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ஆழ்ந்த இரங்கல். இதுபோன்ற விபத்துகள் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் சாதாரணமாகி விட்டது. உயிரிழப்புக்கு போதிய நிவாரணமும், விபத்துகள் தொடராமல் தடுப்பதும் அவசியம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.