விருதுநகர் மக்களவைத் தொகுதி

2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 2.42% குறைந்து 74.96% வாக்குகள் மட்டுமே பதிவாகின.

விருதுநகர் மக்களவைத் தொகுதி
விருதுநகர்
  • News18
  • Last Updated: March 15, 2019, 5:12 PM IST
  • Share this:
விருதுநகர் தொகுதி மறுசீரமைப்பின் போது சிவகாசி மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டதன் காரணமாக விருதுநகர், மக்களவைத் தொகுதியக உருமாற்றம் பெற்றது.

16-வது மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க-வின் டி.ராதாகிருஷ்ணன் 4,06,694 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து பா.ஜ.க உடன் கூட்டணி  வைத்துப் போட்டியிட்ட ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ 2,61,143 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியைச் சந்தித்தார்.

தி.மு.க சார்பில் போட்டியிட்ட ரத்தினவேல் 2,41,505 வாக்குகள் பெற்று தோற்றார். 15-வது மக்களவைத் தேர்தலில் 3,07,187 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர், 16-வது மக்களவைத் தேர்தலில் வெறும் 38,482 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வியைச் சந்தித்தார்.


2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 77.38% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 2.42% குறைந்து 74.96% வாக்குகள் மட்டுமே பதிவாகின.
First published: March 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்