முகப்பு /செய்தி /தமிழ்நாடு / விருதுநகர் கொடூர சம்பவம் சிபிசிஐடிக்கு மாற்றம்... எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

விருதுநகர் கொடூர சம்பவம் சிபிசிஐடிக்கு மாற்றம்... எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

MK Stalin | Edappadi Palanisamy | விருதுநகரில், 22 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

விருதுநகரைச் சேர்ந்தவர் 27 வயதான ஹரிஹரன்; இவர் மெடிக்கல் குடோன் ஒன்றில் பணியாற்றி வருகிறார். திருமணமாகி விவாகரத்து பெற்ற ஹரிஹரன், 22வது வார்டு திமுக இளைஞரணியில் அமைப்பாளராக இருந்தார். திமுக இளைஞரணியில் 10வது வார்டு அமைப்பாளராக இருந்தவர் 24 வயதான ஜூனைத் அகமது; இவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. ஜூனைத் அகமதுவும் ஹரிஹரனும் நண்பர்களாக உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் பட்டியலினத்தின் 22 வயது இளம்பெண்; அப்பகுதியில் உள்ள ஒரு காட்டன் மில்லில் வேலை செய்து வருகிறார்

ஹரிஹரனும் இளம்பெண்ணும் முகநுால் மூலம் நண்பர்களாகினர். இளம்பெண்ணைக் காதலிப்பது போல் ஹரிஹரன் நடித்து ஒரு கட்டத்தில் அவரது அந்தரங்கப் படங்களை கேட்டு வாங்கினார். பின்னர் அந்தப் படங்களை வெளியிட்டு விடுவதாகக் கூறி மிரட்டி கடந்த ஆகஸ்ட் மாதம், 20ம் தேதி, பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாகவும் பதிவு செய்தார். அந்த வீடியோவை, தனது நண்பன் ஜுனைத் அகமதுவுக்கு அனுப்பினார் ஹரிஹரன்

ஜுனைத் அந்த வீடியோவை தனது பகுதியைச் சேர்ந்த பிரவீணுக்கு அனுப்ப அவர் மூலம், 15, 16 மற்றும் 17 வயதுள்ள பள்ளி மாணவர்கள் நான்கு பேருக்கு வீடியோ அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அந்த வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டி இளம்பெண்ணை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர். பாதிக்கப்பட்ட பெண் தான் பணியாற்றும் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராகப் பணிபுரியும் 37 வயதான மாடசாமியை அணுகி காப்பாற்றும்படி கோரினார். மாடசாமியோ அந்த வீடியோவைக் கேட்டு வாங்கிப் பார்த்து விட்டு அவரும் அந்தப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

Also read : பெண் மருத்துவர் ஆண் நண்பர் கண்முன் கேங் ரேப்... தமிழகத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்

ஒரு கட்டத்தில் இந்த 8 நபர்களின் தொடர் கொடுமைகள் தாங்க இயலாத அந்தப் பெண், பாண்டியன் நகர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஹரிஹரன், ஜுனைத் அகமது, பிரவீண், மாடசாமி மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகத்தைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில்

இதுகுறித்து எதிர்க்கட்சியான அதிமுக புதன்கிழமை நடந்த சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தது அதற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர், விருதுநகர் பாலியல் பலாத்கார வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றும்படி டிஜிபிக்கு உத்தரவிடப்படும் எனத் தெரிவித்தார். மேலும், 60 நாட்களுக்குள் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் சட்டரீதியில் கடும் தண்டனை பெற்றுத் தரப்படும் என்றும் தெரிவித்தார்.

First published:

Tags: Edappadi palanisamy, MK Stalin, TN Assembly, Virudhunagar