Home /News /tamil-nadu /

திருமணமான பெண்ணுக்கு செல்போனில் தொல்லை.. தட்டிக்கேட்ட சித்தப்பாவை காரை ஏற்றி கொன்ற கொடூரம்

திருமணமான பெண்ணுக்கு செல்போனில் தொல்லை.. தட்டிக்கேட்ட சித்தப்பாவை காரை ஏற்றி கொன்ற கொடூரம்

கொலை

கொலை

திருமணமான பெண்ணுக்கு செல்போனில் தொல்லை கொடுத்த வாலிபரை தட்டிக்கேட்ட சித்தப்பாவை கொலை செய்த வழக்கில் 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

    விருதுநகரில் அண்ணன் மகளுக்கு தொல்லை கொடுத்தவனை தட்டிக்கேட்ட சித்தப்பாவை காரை ஏற்றி கொலை செய்த கொடூரம்

    அருப்புக்கோட்டை  அருகே பந்தல்குடி வெள்ளையாபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 46). பூ கட்டி விற்கும் தொழில் செய்து வரும் செந்திலுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இவரது அண்ணன் மகள் அனிதா. இவருக்கு வீரசோழன் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் பந்தல்குடியை சேர்ந்த  முத்துகுமார் (வயது 27) என்ற இளைஞர் அனிதாவுக்கு போன் மூலம் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

    இதையறிந்த பாண்டி அனிதாவின் சித்தப்பா செந்திலிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செந்தில் தனது மகன்களை அழைத்துக்கொண்டு பந்தல்குடி புறவழிச்சாலை அருகே கொப்பு சித்தம்பட்டி கிராமம் செல்லும் சாலையில் வைத்து முத்துகுமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது.  இதனையடுத்து செந்தில் தனது மகனை ஏற்றிக்கொண்டு இருசக்கர வாகனத்தின் மூலமாக புறவழிச்சாலை கடக்கும் முன் முத்துகுமார் தான் ஓட்டி வந்த காரை செந்திலின் இரு சக்கர வாகனத்தின் பின்புறம் வேகமாக மோதியுள்ளார்.

    Also Read: கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த தந்தையை கொன்ற மகள்.. தாயும்.. கள்ளக்காதலனும் கைது

    இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த செந்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த முத்துக்குமார் காரில் இருந்த விஜயகுமார் மற்றும் தாயார் விஜயலட்சுமி ஆகிய மூவரும் காருடன் தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து செந்தில் மகன் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பந்தல்குடி காவல்துறையினர்  உடலை கைப்பற்றி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Also Read: செல்போன் கொடுக்காத ஆத்திரத்தில் தங்கையை வெட்டிக்கொன்ற அக்கா.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்

    செந்தில் மீது காரை ஏற்றி கொலை செய்ததாக கூறப்படும் முத்துகுமார் , தயார் விஜயலட்சுமி  மற்றும் சகோதரர் விஜயகுமார் ஆகிய மூவரை  பங்தல்குடி காவல் துறையினர் தேடி வந்தனர்.
    சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் ஆய்வு செய்தார். இந்நிலையில் செந்திலை காரை ஏற்றி கொலை செய்த வழக்கில் தாய் விஜயலட்சுமி, மகன்கள் , மற்றும் அவர்களது கூட்டாளியான ராஜபாண்டி,கோபினதான்,பாண்டியராஜ்,  மொத்தம் 6 பேரை  பந்தல்குடி காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    செய்தியாளர் : கணேஷ்நாத் 
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime News, Death, Murder, Virudhunagar

    அடுத்த செய்தி