Home /News /tamil-nadu /

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு: 4 பேருக்கும் 18ம் தேதிவரை நீதிமன்ற காவல்

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு: 4 பேருக்கும் 18ம் தேதிவரை நீதிமன்ற காவல்

பாலியல் வன்கொடுமை வழக்கு

பாலியல் வன்கொடுமை வழக்கு

பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்போன்களை ஆய்வு செய்து, சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட குடோனிலிருந்து போதை ஊசிகள் போதை மாத்திரைகள் சிக்கியுள்ளது

மேலும் படிக்கவும் ...
    விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில்  குற்றஞ்சாட்ட 4 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை  ஏப்ரல் 18ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை  செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி பிரவீன் ஆகிய 4 பேரை கடந்த 29ஆம் தேதி 6 நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுத்தது. நான்கு பேரிடம் கடந்த 6 நாட்களாக  கூட்டாகவும் தனித்தனியாகவும் குறுக்கு விசாரணையும், பாலியல் வன்கொடுமை  நடைபெற்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றும் சிபிசிஐடி காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது.

    செல்போன்களை ஆய்வு செய்து, சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட குடோனிலிருந்து போதை ஊசிகள் போதை மாத்திரைகள் சிக்கியுள்ளது.

    4 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும் செல்போன்களை ஆய்வு நடத்தியதன் அடிப்படையிலும் 4 பேருடைய சக நண்பர்கள் 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அனைவரிடமும் நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை வாக்குமூலமாக  சிபிசிஐடி போலீசார் பெற்றுள்ளனர்.
    வீடியோ பதிவும் செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: கொதிக்கும் பானிபூரி குருமாவில் 2 வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழப்பு.. கும்பகோணத்தில் சோகம்


    இதனிடையே கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் உள்ள 4 பள்ளி மாணவர்களிடம் கடந்த 1ம் தேதி 4மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் 2 முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் சிலர் சிக்கலாம் என கூறப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு மட்டும் தொடர்பு உள்ளதாக சிபிசிஐடி தரப்பில் கூறப்படுகிறது.

    மேலும் படிக்க: தமிழகத்தில் இன்று 5 இடங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்


    கைது செய்யப்பட்ட  8 பேருடைய நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவு பெறுவது குறிப்பிடத்தக்கது . இதையடுத்து, காவல் விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேரை வரும் 18ம் தேதி வரை 15 நாட்கள்  நீதிமன்றக் காவலில் வைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Sexual harassment, Virudhunagar

    அடுத்த செய்தி