ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு: பள்ளி மாணவரை வழக்கில் இருந்து விடுவிக்க சிபிசிஐடி முடிவு?

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு: பள்ளி மாணவரை வழக்கில் இருந்து விடுவிக்க சிபிசிஐடி முடிவு?

பாலியல் வழக்கு

பாலியல் வழக்கு

விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கில் முகாந்திரம் இல்லாததால் ஒரு பள்ளி மாணவனை விடுவிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில்  கைது செய்யப்பட்ட  பள்ளி மாணவர்கள் 4 பேரில் ஒருவரை  சிபிசிஐடி போலீசார் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  .விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஹரிஹரன், அவரது நண்பர்களான திமுக நிர்வாகி ஜூனத்அகமது, பிரவீன் மற்றும் மாடசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதேபோல் பள்ளி மாணவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

  இந்த சம்பவம் தொடர்பாக  பாதிக்கப்பட்ட பெண், அவரது பெற்றோர், கைது செய்யப்பட்ட நபர்களின் பெற்றோர். உறவினர், நண்பர்கள் என  விசாரணை நடத்தப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் அவரது நண்பர்களின் செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டது. தற்பொழுது விசாரணையின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியில் சிபிசிஐடி காவல்துறை ஈடுபட்டு வருகிறது.

  இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவரான பள்ளி மாணவர் மீது குற்றம் செய்ததற்கான எந்த  முகாந்திரமும் இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஒரே ஒரு பள்ளி மாணவரை மட்டும் வழக்கிலிருந்து விடுவிக்க முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே 7 பேருக்கு எதிராக மட்டும் குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டு வருவதாகவும் ஒரு சில தினங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக சிபிசிஐடி  காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  இதையும் படிங்க: கடலூரில் தொழிற்சாலையில் திருட வந்த கும்பல் - போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீச முயற்சி

  ஒரு பள்ளி மாணவனை வழக்கில் இருந்து விடுவிக்க உள்ளதால் விருதுநகர்  குற்றவியல்  நீதிமன்ற எண் இரண்டில் நீதித்துறை நடுவர் நிஷாந்தினி அந்த மாணவனிடம் விசாரணை நடத்தினார். அவரிடம் நீதிமன்ற மறைமுக வாக்குமூலம் பெறப்பட்டது. இந்த வாக்குமூலத்தை சிறார் நீதிமன்ற நீதிபதி மருதுபாண்டிக்கு அனுப்பி வைப்பார். அதன்பின்னர் சிறார் நீதிமன்ற நீதிபதி வழக்கிலிருந்து விடுவிப்பது குறித்து முடிவெடுப்பார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: School student, Sexual harassment, Virudhunagar