மொழிவாரி மாநிலம் பிரிந்த நவம்பர் 1ஆம் தேதியை அரசு கொண்டாட முன்வர வேண்டும் என்றும் தமிழகத்திற்கு தனிக்கொடி அறிவிக்கவேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, இலங்கை கடற்படையின் காட்டுமிராண்டித்தனமான வன்முறையை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது.
சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக இலங்கை அரசு விடுவிக்க வேண்டும்.படுகொலை செய்யப்பட்ட ராஜ்கிரன் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்,
நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக மீனவர்களை தொடர்ந்து படுகொலை செய்யக்கூடிய சிங்கள கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான அரசு மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது . திமுகவின் நான்கு மாத கால ஆட்சி அனைவருக்குமான நல்லாட்சியாக விளங்குகிறது. அதற்கு அத்தாட்சியாக தான் உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றியை மக்கள் வழங்கியுள்ளனர் என்று குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: இலங்கை கடற்படை தாக்குதலால் உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் உடல் சொந்த ஊரில் அடக்கம்!
மேலும், “நவம்பர் 1ஆம் தேதி மொழிவாரி அடிப்படையில் மாநிலம் பிரிந்த நாள் . இந்த ஆண்டு முதல் தமிழக அரசு இந்த நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும். தமிழகத்திற்கு தனிக்கொடி அறிவிக்கவேண்டும். நவம்பர் ஒன்றாம் தேதியை தமிழர் இறையாண்மை நாள் என அறிவிக்க வேண்டும். சங்கரலிங்கனார் நினைவை போற்றும் விதமாக அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும். அவர் பெயரில் விருது வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
மேலும் படிக்க: அரசு மருத்துவமனையில் காலாவதியான மருந்து வழங்கப்பட்ட சம்பவம்: நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தகவல்!உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.