• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குடிபோதையில் காரை ஓட்டிய இளைஞர்.. மின்கம்பத்தில் மோதியதில் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்

குடிபோதையில் காரை ஓட்டிய இளைஞர்.. மின்கம்பத்தில் மோதியதில் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்

விபத்து

விபத்து

குடிபோதையில் வாகனத்தை இயக்கியதால் காம்பவுண்ட் சுவர் மற்றும் மின்கம்பம்  சாய்ந்து விழுந்தன.

  • Share this:
    இராஜபாளையத்தில் குடிபோதையில் காரை ஓட்டி வட்டாட்சியர் அலுவலக சுவர் மின் கம்பத்தை சேதப்படுத்திய இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முடங்கியார் சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. இதன் இணைப்பு சாலை பகுதியான மாடசாமி கோவில் செல்லும் சாலையில் நீதிமன்றம் மற்றும் பள்ளி கூடம் மற்றும்  குடியிருப்புகளும் உள்ளன. இந்தப் பகுதியில் PSK நகர் பகுதியை சேர்ந்த காந்திராஜா மகன் கோபிகிருஷ்ணன் (வயது 32) என்ற இளைஞர் பொலிரோ காரை அதிவேகமாக ஓட்டி வந்துள்ளார். விபத்து நடந்த இடத்தில்  ஆண்கள் கழிப்பறையும் உள்ளது. கழிப்பறைக்கு செல்வதற்காக சம்பந்தமான பகுதியைச் சேர்ந்த  நபர் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கழிவறைக்கு செல்ல முயன்றுள்ளார் .

    வேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தில் மோதி இழுத்து சென்று அருகே இருந்த மின் கம்பத்தில் மோதி வட்டாட்சியர் அலுவலகம் சுவரில் மோதி கார் நின்று உள்ளது. குடிபோதையில் வாகனத்தை இயக்கியதால் காம்பவுண்ட் சுவர் மற்றும் மின்கம்பம்  சாய்ந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. விடுமுறை நாள் என்பதால் பள்ளிக்கூடங்களுக்கு குழந்தைகள் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கழிப்பறைக்கு சென்று நபரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    தகவலறிந்து விரைந்து வந்த மின்சார துறை ஊழியர்கள் உடனடியாக உயர் மின் வயர் என்பதால் மின்சாரத்தை துண்டித்து அறுந்து போன வயர்களை உடனடியாக மாற்றி பெரும் உயிர் சேதம் இன்றி விரைந்து செயல்பட்டனர் .மேலும் விபத்துக்குள்ளான கோபிகிருஷ்ணனிடம்  இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர்: M.செந்தில்குமார் (சிவகாசி)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: