ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆவின் மோசடி வழக்கு: ராஜேந்திர பாலாஜியிடம் 11 மணி நேரம் விசாரணை

ஆவின் மோசடி வழக்கு: ராஜேந்திர பாலாஜியிடம் 11 மணி நேரம் விசாரணை

ஆவினின் வேலை வாங்கி  தருவதாக கூறி  பண மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ராஜேந்திர பாலாஜி விசாரணைக்கு ஆஜரானார். காலை 10 மணிக்கு துவங்கிய விசாரணை இரவு வரை நீடித்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஆவினின் வேலை வாங்கி  தருவதாக கூறி  பண மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில்  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில்  11 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி  3 கோடி ரூபாய் மோசடி செய்த புகார்களில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் நால்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில்,  கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர்  திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில்,  இந்த வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக ராஜேந்திர பாலாஜிக்கு விருதுநகர் மாவட்ட குற்றப்பபிரிவு  சம்மன் அனுப்பியது.  கடந்த மாதம் 31ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வந்த நிலையில் ஏற்கனவே ராஜேந்திர பாலாஜிக்கு கொரானா தொற்று உறுதியான நிலையில் கொரானா இல்லை என்ற நெகட்டிவ் சான்றிதழ் கேட்டதால் ஆஜராகாமல் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகம் முன்பு காரிலேயே காத்திருந்தார்.

இதனையடுத்து நெகட்டிவ் சான்றிதழ் வாங்கிவிட்டு மீண்டும் ஆஜராவதாக மனு அளித்துவிட்டு திரும்பி சென்றார். இந்நிலையில் மீண்டும் ஆஜராக மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் இருந்து திங்கள் கிழமை சம்மன் அனுப்பப்பட்டது.  இதனையடுத்து நேற்று மீண்டும் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ராஜேந்திர பாலாஜி விசாரணைக்கு ஆஜரானார்.

இதையும் படிங்க: இன்னும் 27 அமாவாசைகளில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை

காலை 10 மணிக்கு துவங்கிய விசாரணை இரவு வரை நீடித்தது. சுமார் 11 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. பண பரிவர்த்தனை விவரங்கள், புகார் விவரங்கள் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. டி.எஸ்.பி.,கண்ணன், இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ்  ஆகியோர் ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை நடத்தினர்.

First published:

Tags: Aavin, Rajendra balaji, Virudhunagar