விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்ததற்காக ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரியை காலில் விழவைத்து தண்டனை கொடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 15ஆவது வார்டு பெரும்பச்சேரி பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்து வருகிறது. இந்த பகுதியில் ஓய்வுபெற்ற மின் வாரிய அதிகாரி பெருமாள்சாமி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். பெருமாள்சாமியின் மகன் கற்பக காளியப்பன். மாற்று திறனாளியான அவர் தனது பகுதி மக்கள் படிப்பறிவு பெற வேண்டும் என்பதற்காக "வா"திட்டம் என்ற பெயரில் இலவச அரசுத்தேர்வு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார்.
இதே பகுதியை சேர்ந்த வெற்றிவேல் குமரன் என்பவர் இலவச பயிற்சி அளிக்கும் கற்பக காளியப்பன் உடல் ஊனத்தை பற்றி கிண்டல் செய்ததாகவும் தொந்தரவு செய்ததாகவும் கூறி வெற்றிவேல் குமரன் மீது கற்பக காளியப்பன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் இருதரப்பினரையும் அழைத்து விசாரித்து எச்சரித்து அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில் ஓய்வு பெற்ற மின்வாரிய அரசு ஊழியரான பெருமாள்சாமி தரப்பினரை ஊர் கூட்டத்திற்கு அழைத்த ஊர் நாட்டாமை வீராச்சாமி தலைமையிலான ஊர் நிர்வாகிகள் ஊர் கட்டுப்பாடை மீறி காவல் நிலையம் சென்றதால் ஊரைவிட்டு தள்ளி வைப்பதாகவும் ரூ.25,000 அபராதம் கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற ஊர் கூட்டத்தில் கலந்து கொண்ட பெருமாள்சாமியிடம் 25000 கட்ட வேண்டும் என்றும் அதைக்கட்ட முடியாவிட்டால் காலில் விழுந்து கும்பிட வேண்டும் என்றும் காலில் விழுந்தால் அபராத தொகை குறையும் என்றும் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: பிள்ளைகளுக்கு பாரமாக இருக்கக்கூடாது’: தீக்குளித்து தற்கொலை செய்த மூதாட்டி
இதைதொடர்ந்து பெருமாள்சாமி வரவழைக்கப்பட்டு காலில் விழ வற்புறுத்தப்பட்டார். இதை எதிர்க்கும் விதமாக மற்றொரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கடும் கூச்சல் குழப்பம் நிலவிய வீடியோ படக் காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் மன உளைச்சலில் இருப்பதாக பெருமாள்சாமி வேதனையுடன் தெரிவித்தார்.
செய்தியாளர்: செந்தில்குமார்
மேலும் படிக்க: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? அரசு பேருந்து முன்பதிவு இன்று தொடக்கம்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.