• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நாளைக்கு லீவு இல்ல தம்பி.. நம்ம ஊர்ல நல்லா வெயில் காயுது.. ஸ்கூல் போங்க... விஜய் ரசிகருக்கு விருதுநகர் கலெக்டர் ட்வீட்

நாளைக்கு லீவு இல்ல தம்பி.. நம்ம ஊர்ல நல்லா வெயில் காயுது.. ஸ்கூல் போங்க... விஜய் ரசிகருக்கு விருதுநகர் கலெக்டர் ட்வீட்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விருதுநகரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பிய மாணவருக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டி பதிலளித்துள்ளார்.

  • Share this:
    சென்னை உட்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக கனமழை பெய்து வருகிறது. அதனால், சென்னையின் பலபகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது. அதனால், பொதுமக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதேபோல, சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. மழையைப் பொறுத்து மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துவருகின்றனர்.

    நேற்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. அதனால், நேற்று பெரும்பாலான மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, நாமக்கல், வேலூர், தேனி, கரூர், கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், திண்டுக்கல், விருதுநகர், அரியலூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.




    இந்தநிலையில், விஜய் சிவா விஷ்ணு என்ற பெயரில் ட்விட்டர் கணக்கை வைத்துள்ள விருதுநகரைச் சேர்ந்த மாணவர் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா? என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பி அதனை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரை டேக் செய்திருந்தார். அதற்கு பதிலளித்த விருதுநகர் ஆட்சியர் ஜெகநாத் ரெட், ‘இல்லை. கூடுதல் விடுமுறை கிடையாது தம்பி. பள்ளிக்குச் செல். சூரியன் வெளியே வந்துவிட்டது. அதனால், படி, விளையாடு, கொண்டாடு, அதனை திரும்பச் செய். அதேபோல, வேண்டிக்கொள். நம் மாவட்டத்துக்கு நல்லமழை கிடைத்துள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.

    அதற்கு அந்த நபர், ‘சார்.. ஸ்ரீவில்லிபுத்தூரில் கனமழை பெய்கிறது. அதனால், தான் கோரிக்கைவைத்தேன்’ என்று பதிலளித்தார். அதற்கும் பதிலளித்த ஆட்சியர், ‘நாளைக்கு மழை இருக்காது. ஏற்கெனவே தாமதம் ஆகிவிட்டது. தூங்கு. நாளை பள்ளி உள்ளது. குட் நைட் தம்பி’ என்று பதிவிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: