Home /News /tamil-nadu /

விடுமுறையை எப்படி செலவிடுவது? விருதுநகர் ஆட்சியரின் சூப்பர் அட்வைஸ்

விடுமுறையை எப்படி செலவிடுவது? விருதுநகர் ஆட்சியரின் சூப்பர் அட்வைஸ்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

விருதுநகர் மாவட்டம், 27.12.2021 முதல் 02.01.2022 வரையிலான பள்ளி விடுமுறை காலத்தில் நேரடி சிறப்பு வகுப்புகளோ, இணையவழி பயிற்சிகளோ நடைபெறுகிறது என புகார் வரும் பட்சத்தில் அப்பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தங்கள் புத்தாண்டு விடுமுறை நாட்களை எவ்வாறு செலவிடுவது என்பது தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டி பள்ளி மாணவர்களுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளனர்.

    தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்டம், 27.12.2021 முதல் 02.01.2022 வரையிலான பள்ளி விடுமுறை காலத்தில் நேரடி சிறப்பு வகுப்புகளோ, இணையவழி பயிற்சிகளோ நடைபெறுகிறது என புகார் வரும் பட்சத்தில் அப்பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, பள்ளி மாணவர்கள் தங்களது விடுமுறையை எவ்வாறு செலவிடுவது என்பது தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டி ட்விட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், தம்பிகளா, விடுமுறையை எவ்வாறு செலவிடுவது.. குடும்பத்தினருடனும் மற்றும் நண்பர்களுடனும் 50 சதவீத நேரத்தை செலவிடுங்கள். மொபைல், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களுக்கு 10 சதவீத நேரத்தை செலவிடுங்கள்.  20 சதவீத நேரத்தை விளையாடவும் 20 சதவீத நேரத்தை ஓய்வுக்கும் செலவிடுங்கள். படிங்கள், மீண்டும் படிங்கள். இது புத்தாண்டு விடுமுறை மட்டுமே, ஆண்டு விடுமுறை அல்ல. பாதுகாப்பாக இருங்கள் ‘ என்று பதிவிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சிக்கான இணையதளம்: ரஜினிகாந்த் அறக்கட்டளை அறிமுகம்


    ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இயங்கும் மேகநாத் ரெட்டி, தொகுதி மக்கள், மாணவர்களின் கேள்விகளுக்கும் அவ்வப்போதும் நகைச்சுவையாக  பதில் அளிப்பார். நவம்பர் மாதத்தில் தொடர் மழை பெய்தபோது, விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்று குறும்புக்கார மாணவர் ஒருவர் அவரிடம் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்தார்.

    அதற்கு, இல்லை. கூடுதல் விடுமுறை கிடையாது தம்பி. பள்ளிக்குச் செல். சூரியன் வெளியே வந்துவிட்டது. அதனால், படி, விளையாடு, கொண்டாடு, அதனை திரும்பச் செய். அதேபோல, வேண்டிக்கொள். நம் மாவட்டத்துக்கு நல்லமழை கிடைத்துள்ளது என்றும் ‘நாளைக்கு மழை இருக்காது. ஏற்கெனவே தாமதம் ஆகிவிட்டது. தூங்கு. நாளை பள்ளி உள்ளது. குட் நைட் தம்பி’ என்றும் நகைச்சுவையாக பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிங்க: மின் கட்டணத்துக்கு மறைமுகமாக ஜிஎஸ்டி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்

    Published by:Murugesh M
    First published:

    Tags: School Holiday, School students, Virudhunagar

    அடுத்த செய்தி