• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 48 மணி நேரத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சகோதரர்கள்!

48 மணி நேரத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சகோதரர்கள்!

மரக்கன்றுகளை எல்லா இடங்களிலும் நடுவதில்லை. மாறாக, நீர்வளப் பகுதிகளை தேர்வு செய்து வேலி போன்ற சரியான பாதுகாப்புடன் இருக்கும் பகுதிகளை பகுப்பாய்வு செய்வோம் என்கிறார் ஸ்ரீகாந்த்.

  • Share this:
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் 48 மணி நேரத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்ந்து சாதனை படைத்துள்ளனர். ‘சர்வதேச புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’-ல் தங்கள் பெயரை இடம்பெற செய்து தங்கள் சொந்த மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா கல்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் அருண் (25) மற்றும் ஸ்ரீகாந்த் (22). சென்னையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் அருண் பணிபுரிகிறார்; ஸ்ரீகாந்த் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார்.நியூஸ்18 டிஜிட்டல் தளத்திற்காக ஸ்ரீகாந்த் பேசுகையில், ஒருங்கிணைந்த முயற்சியாக மரக்கன்றுகளை நடுவதற்கு ஒரு நாளைக்கு 8 மணி நேரம் செலவிடுகிறோம். நாங்கள் இந்த ‘இயற்கை சவாலை’ ஜனவரி 2021-ல் எடுத்தோம். கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பணி நேரம் போக எங்கள் ஓய்வு நேரத்தை பயனுள்ள முறையில் செலவிட முடிவு செய்தோம். தொடக்கத்தில், வீட்டின் பின்புறத்தில் இரண்டு செடிகளை நட்டு அதனை பராமரித்தோம். பின் அந்த ஆர்வம் தோட்டமாக உருவெடுத்தது. பின்னர் அதன் வளர்ச்சியைக் கண்டதும், மரக்கன்றுகளை நடுவதில் ஆர்வம் அதிகரித்ததால், நாங்கள் இருவரும் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த எங்கள் நேரத்தை ஒதுக்க முடிவு செய்தோம். தற்போது வரை விருதுநகர் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம்.இதுபோன்ற மரக்கன்றுகளை நாங்கள் எல்லா இடங்களிலும் நடுவதில்லை. மாறாக, நீர்வளப் பகுதிகளை தேர்வு செய்து வேலி போன்ற சரியான பாதுகாப்புடன் இருக்கும் பகுதிகளை பகுப்பாய்வு செய்வோம். அதன் பிறகு நாங்கள் எங்கள் சைக்கிளிலேயே சென்று ஒவ்வொரு இடத்திலும் மரக்கன்றுகளை நடுவோம். 48 மணி நேரத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டோம் என்று கூறிய ஸ்ரீகாந்திடம், 48 மணி நேரத்தில் எப்படி இவ்வளவு மரக்கன்றுகளை நட முடிந்தது என்று கேட்டபோது, ​முதலில் மரக்கன்றுகளை நடவு செய்ய விரும்பும் இடங்களை தேர்ந்தெடுத்து. முன்கூட்டியே அம்மரக்கன்றுகளை தோராயமாக அங்கு சென்று வைத்துவிடுவோம். உதாரணமாக, பள்ளிகளில் நடவேண்டுமென்றால், பள்ளிகளுக்குச் சென்று மரக்கன்றுகளை பாதுகாப்பாக வைத்துவிடுவோம். அதுபோன்று, காவல் நிலையங்கள், அரசு மருத்துவமனை, கோவில்கள் என பிரித்து வைப்போம். இந்த ஐடியாவானது எங்கள் செயல்முறையை விரைவுபடுத்த உதவியது.Must Read | ‘வெரிகோஸ் வெயின்ஸ்’ நோய் குறித்து தெரியுமா? மருத்துவர் பகிரும் எச்சரிக்கை தகவல்!

அதன் பிறகு, நாங்கள் ஒரு சைக்கிள் பேரணியைத் தொடங்கி, ஒவ்வொரு இடத்திற்கும் சென்று தன்னார்வலர்களின் உதவியுடன் மரக்கன்றுகளை நடவு செய்தோம். 6 நாட்களில் மரக்கன்றுகளை நடவு செய்ய மொத்தம் ஒரு நாளைக்கு மொத்தம் 8 மணிநேரத்தை செலவிட்டோம். இதனால் 48 மணிநேர கணக்கீடு வந்தது. முன்னதாக, 2019ஆம் ஆண்டில், நானும் எனது சகோதரர் அருணும் பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வை மேற்கொள்ள கன்னியாகுமரியிலிருந்து மும்பைக்கு 11 நாட்கள் சைக்கிள் பேரணியை மேற்கொண்டோம். இது ‘இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’-ஆல் அங்கீகரிக்கப்பட்டது.ஆரம்ப வெற்றிக்குப் பிறகு, மரக்கன்றுகளை நடுவதன் மூலம் அடுத்த நிலைக்கு இதனை எடுத்துச் செல்ல முடிவெடுத்ததாக ஸ்ரீகாந்த் தெரிவித்தார். ஆரம்பத்தில், நாங்கள் இதற்காக எங்கள் சேமிப்பிலிருந்த பணத்தை செலவழித்து வந்தோம். பின்னர், சிவகாசி தாலுகாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் உதவியுடன் எங்கள் நண்பர்கள் எங்களுக்கு நிதியளிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், செப்டம்பர் 14ஆம் தேதியன்று, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டியைச் சந்தித்து, எங்கள் பணிக்கு ‘சர்வதேச புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ ஒப்புதல் அளித்ததற்காக அவரிடம் ஆசி பெற்றோம் என்று ஸ்ரீகாந்த் கூறினார். இதற்கிடையில், விரைவில் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பசுமை இயக்கத்தில் தங்களையும் இணைக்க வேண்டும் என்று இச்சகோதரர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்ததாக ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: