Home /News /tamil-nadu /

கொத்தனார் வேலைக்கு போன இடத்தில் பைக் திருட்டு - கில்லாடி கொள்ளையர்களை கைது செய்த போலீஸ்

கொத்தனார் வேலைக்கு போன இடத்தில் பைக் திருட்டு - கில்லாடி கொள்ளையர்களை கைது செய்த போலீஸ்

இருசக்கர வாகன திருட்டில் ஈடுப்பட்டவர்கள் கைது

இருசக்கர வாகன திருட்டில் ஈடுப்பட்டவர்கள் கைது

Virudhunagar : கொத்தனார் வேலைக்கு போகும் இடத்திலிருந்து இரு சக்கர வாகனங்களை திருடும் வழக்கத்தை கொண்டிருப்பதாக கைதானவர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர்.

    தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த நபரக்ளை விருதுநகர் போலீஸார் கைது செய்துள்ளனர். 

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கரியாப்பட்டி பஜார் பகுதியில் நின்றுகொண்டிருந்த  Splendor இரண்டு சக்கர வாகனம் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் அதனடிப்படையில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன்  உத்தரவின்படி,  தனிப்பிரிவு அமைத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது  நரிக்குடி மெயின்ரோட்டில் பாப்பணம் விலக்கு அருகே சந்தேகத்தின் பேரில்  வந்த டூ வீலரை நிறுத்தி போலீஸார் விசாரித்தனர்.

    அதில்  காரியாபட்டி அச்சம்படியை  சேர்ந்த முருகேசன் மகன் சரன் என்ற செல்வம் (வயது 26), அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் குணசேகரன் என்ற சகாதேவன் (30) என்பதும் காரியாபட்டியில் காணாமல் போன இருசக்கர வாகனத்தை திருடி வந்ததும் தெரியவந்தது. மேலும்  விசாரித்தபோது இருவரும் கொத்தனார் வேலை செய்வதாகவும் வேலைக்கு போன இடத்திலிருந்து வரும் பொழுது இரண்டு சக்கர வாகனங்களை திருடிக்கொண்டு வந்து வைப்பதும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    Also Read : டிஜே பார்ட்டி.. டான்ஸ் எல்லாம் காரணமில்லை - மாப்பிள்ளை மாறிய விவகாரத்தில் நடந்தது என்ன?

    இவர்கள் வேலைக்கு சென்ற  திருப்பூரில் இருந்து ஒரு வாகனமும் திருச்செந்தூரிலிருந்து மூன்று வாகனங்களும் அருப்புக்கோட்டையில் இருந்து இரண்டு வாகனங்களும் பரமக்குடி பகுதியிலிருந்து இரண்டு வாகனமும்  மதுரையிலிருந்து இரண்டு வாகனமும் ஒட்டன்சத்திரத்தில் ஒரு வாகனமும்  திருடியதும் அதை குணசேகரன் தனது உடன்பிறந்த சகோதரர்களான அச்சம்பட்டியை  சேர்ந்த கருப்புசாமி, வீரமணி ஆகிய இருவரிடமும் கொடுத்துள்ளாதாகவும் மற்ற வாகனங்களை சரண்  வீட்டருகே உள்ள முட்புதருக்குள் மறைத்து வைத்துள்ளது தெரியவந்தது.

    Also Read:  திருட வந்து வேட்டி போனதுதான் மிச்சம்.. போலீஸாரிடம் கண்ணீர் வடித்த திருடன்

    மேலும் கருப்பசாமியும் வீரமணியும் திருட்டு வண்டிகளை வாங்கி வைத்திருந்ததும் அதில் சிலவற்றை உடைத்து உதிரிபாகங்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. வி.ஏ.ஓ  மற்றும் கிராம உதவியாளர்  முன்னிலையில் கொடுத்த  வாக்குமூலத்தின் மூலம் திருட்டு வாகனத்தை வாங்கிய இருவர்  உட்பட 4 பேரையும் கைது செய்தும் திருடிய  13  இருசக்கர வாகனங்களும், இரண்டு ஆட்டோ மற்றும் ஒரு டாடா ஏசி வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

     செய்தியாளர் : கணேஷ்நாத் அய்யம்பெருமாள் (விருதுநகர்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Arrest, Bike Theft, Crime | குற்றச் செய்திகள், Police, Theft

    அடுத்த செய்தி