நடிகர் இறந்துவிட்டார் என்பதற்காக தடுப்பூசி போடாமல் இருப்பது நியாயமா - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

ஒரு நடிகர் இறந்துவிட்டார் என்பதற்காக தடுப்பூசி போடாமல் இருப்பது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

  • Share this:
    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சுகாதார அதிகாரிகளுடன் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

    இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “கொரானா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு என்பது மிக முக்கியம். முகக்கவசம் அணியாமல் அத்தியாவசியமின்றி வெளியில் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது எங்களுக்கும் மனது கஷ்டமாக
    தான் இருக்கிறது. கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழி இல்லை.

    பொதுமக்கள் வெளியில் வராமல் வீட்டில் இருப்பதை கண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். சென்றமுறை பாதிப்பில் ஆக்சிஜன் தேவை இல்லாமல் இருந்தது. தற்போது ஆக்சிசன் இல்லாத சூழ்நிலையில் உள்ளது. அதை பொதுமக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.’என்றார்.

    தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ’நோயின் தாக்கத்தை பொறுத்து முதலமைச்சர் அவர்கள் முடிவெடுப்பார்கள்’ என்றார். கிராமங்களில் தடுப்பூசி போடுவதன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை என்ற கருத்திற்கு தடுப்பூசி போடுவதன் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நடிகர்கள் நடிகைகள் என அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.-

    தடுப்பூசியால் எந்த பாதிப்பும் இல்லை. ஒரு நடிகர் இறந்துவிட்டார் என்பதற்காக தடுப்பூசி போடாமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம் அவருக்கு வேறு ஏதாவது நோய் இருந்திருக்கும். விலை மதிக்க முடியாத உயிரைப் பாதுகாக்க தடுப்பூசி போடவேண்டும்.

    தடுப்பூசி தட்டுப்பாடு என்பது இல்லை. தனியார் ஆம்புலன்ஸ்கள் அதிக தொகை கேட்பதாக கூறும் புகாரில் அரசு ஆணைப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என அமைச்சர் தெரிவித்தார்.

    சிவகாசி  செய்தியாளர்: செந்தில்
    Published by:Ramprasath H
    First published: